மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படமானது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிவிட்டது. படப்பிடிப்புக்கு நடுவே கிடைக்கும் இடைவெளியில் படத்தின் படத்தொகுப்பு, இசைக்கோர்ப்புப் பணிகளும் நடந்துவருகிறது. அஜித் பிறந்த தினமான மே 1ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத், போனிகபூர் மற்றும் அஜித் கூட்டணியில் இரண்டாவது முறையாக வலிமை படத்துக்காக இணைந்தது. இந்நிலையில், அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. பொதுவாக, ஒரு இயக்குநரை அஜித் தேர்ந்தெடுப்பதில் கதையைக் கேட்பதற்கு முன்பாக சில விஷயங்களை உஷாராகக் கவனிப்பார்.

என்னவென்றால், ஒரு இயக்குநருடன் பணியாற்றும் போது அஜித்துக்கு கம்ஃபர்ட்டாக இருக்க வேண்டும். அஜித்துக்கும் இயக்குநருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவேண்டும். அப்படி, ஒரு படத்தில் எந்த மனக்கசப்பும் இன்றி நடந்து முடிந்துவிட்டால் அந்த இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுப்பார். அப்படித்தான், சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்கள் சாத்தியமானது.

அஜித்துக்கு ஹிட்டே கொடுத்தாலும் செட்டாகாத இயக்குநரை மீண்டும் கமிட் செய்யவே மாட்டார். அதற்கு ஆரம்பம் இயக்குநர் விஷ்ணுவர்தன், மங்காத்தா கொடுத்த வெங்கட்பிரபு ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம்.

சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு நாள் வலிமை படப்பிடிப்பில் ஹெச்.வினோத்தை அழைத்து ஒரு கதையை தயார் செய்ய சொல்லியிருக்கிறார் அஜித். நேர்கொண்டப் பார்வை, வலிமையைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு படம் சேர்ந்து பண்ணலாம் என்று அஜித் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கும் போனிகபூர் தான் தயாரிப்பாளர் என்கிறார்கள்.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

செவ்வாய் 23 மா 2021