மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

3 நாயகிகள் : விருமாண்டி இயக்கத்தில் சசிகுமார் பட அப்டேட் !

3 நாயகிகள் : விருமாண்டி இயக்கத்தில் சசிகுமார் பட அப்டேட் !

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற படம் ‘க/பெ.ரணசிங்கம்’. இந்தப் படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றார். கொரோனா காலகட்டமென்பதால் நேரடியாக் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படம் தண்ணீர் பிரச்னையில் துவங்கி உலக அரசியல் வரை பேசியது. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் விஜய்சேதுபதி இறந்துவிடுகிறார். அவரின் உடலை கேட்டு தமிழ்நாட்டில் போராடும் ஒரு பெண்ணின் துயரக் கதை. உணர்வுப்பூர்வமாக எத்தனையோ அரசியலை பேசி சென்றதால் அசத்தல் சினிமாவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

இந்தப் படத்தை இயக்கிய விருமாண்டியின் அடுத்தப் படத்தின் பணிகள் துவங்கிவிட்டது. இவரின் அடுத்த ஹீரோ சசிகுமார் . இந்தப் படத்தில் சசிகுமாருடன் மூன்று நாயகிகள் நடிக்கிறார்களாம். அதோடு, சினிமா திரையரங்க ஆபரேட்டராக சசிகுமார் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 80களில் அல்லது 90களில் நடக்கும் கதையாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.

சசிகுமாருக்கு கடைசியாக நாடோடிகள் 2 திரைப்படம் வெளியானது. அடுத்து ராஜவம்சம், எம்.ஜி.ஆர்.மகன் படங்கள் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. அதோடு, பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. அதோடு, விருமாண்டி இயக்கும் படமும் இணைந்துள்ளது.

சசிகுமார் இயக்குநராக ’சுப்பிரமணியபுரம்’ மற்றும் ‘ஈசன்’ படங்களைக் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு, இயக்கம் பக்கம் செல்லவில்லை என்றாலும் இவரின் கதைத் தேர்வில் தனித்துவம் இருக்கும். விருமாண்டியும் கவனம் ஈர்த்த இயக்குநரென்பதால், சசிகுமார் நடிக்க இருக்கும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

செவ்வாய் 23 மா 2021