மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

மீண்டும் சுல்தான் ரிலீஸில் சிக்கலா?

மீண்டும் சுல்தான் ரிலீஸில் சிக்கலா?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வந்த ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், ஏப்ரல் 06ஆம் தேதி தேர்தல் என்பதால் ரிலீஸிலிருந்து பின்வாங்கி ரம்ஜானுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சுல்தான்’. இப்படமானது ஏப்ரல் 02ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் தள்ளிப் போகும் போதே, சுல்தான் தள்ளிப் போகிறதா என்று கேள்வி எழுந்தது. அப்போது, எந்த சிக்கலுமின்றி சுல்தான் வெளியாகும் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே திரையரங்குகளில் கூட்டம் இல்லை. இப்போது, கொரோனா தொற்றும் அதிகரித்துவருவதால் சுல்தான் வெளியாகுமா என்று மீண்டும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர் விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில், “ நண்பர்கள் பலர் கொரோனா பரவுவதால் சுல்தான் சொன்னபடி ஏப்ரல் 2வில் வெளியாகுமா என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. சொன்ன தேதியில் சுல்தான் வெளியாகும். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, போதிய முன்னெச்சரிக்கையுடன் திரையரங்கில் படத்தைப் பார்த்து மகிழ காத்திருங்கள்” என்று எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

தேர்தல், கொரோனா அச்சுறுத்தல் என எந்த தடங்கல் வந்தாலும் சுல்தான் பின்வாங்கப் போவதில்லை. அதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. என்னவென்றால், தமிழைப் போலவே, தெலுங்கிலும் பெரியளவில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். தமிழகத்தில் தான் தேர்தல், ஆந்திராவில் தேர்தல் இல்லை. அதோடு, ஏப்ரல் 2-ஆம் தேதிக்குப் பிறகு தெலுங்கில் பெரிய ஹீரோஸ் படங்கள் எக்கச்சக்கமாக வெளியாகிறது. பெரிய ஹீரோஸ் படங்களுடன் சுல்தான் போட்டியிட முடியாது. அதனால், ஏப்ரல் 2ஆம் தேதியை மாற்றுவதில் தயாரிப்புத் தரப்புக்கு விருப்பமில்லை. அதோடு, தமிழகத்தில் நேரடியாக எஸ்.ஆர்.பிரபுவே ரிலீஸ் செய்கிறார். அதனால், பணப் பரிமாற்றத்திலும் எந்த சிக்கலுமில்லை. கூடவே, படத்தை ரிலீஸ் செய்த 20 நாட்களுக்குள் ஓடிடிக்கு வந்துவிடுகிறதாம். ஹாட் ஸ்டார் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. திட்டமிட்டபடி, படத்தின் லாபத்தை பார்த்துவிடுவார் தயாரிப்பாளர் என டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக, குழப்பமே இல்லை.. சுல்தான் வர எந்த சிக்கலுமில்லை!

- தீரன்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 23 மா 2021