மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

அசுரன், விஸ்வாசம், சூப்பர் டீலக்ஸ் படங்களுக்கு தேசிய விருது!

அசுரன், விஸ்வாசம், சூப்பர் டீலக்ஸ் படங்களுக்கு தேசிய விருது!

2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 67ஆவது தேசிய விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அசுரன், விஸ்வாசம், சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு உள்ளிட்டப் படங்களுக்கான கலைஞர்கள் விருதுகளை வென்றுள்ளனர். கொரோனாவினால் ஒரு வருடம் தாமதமாகி தற்போது அறிவித்துள்ளார்கள். டெல்லியின் தேசிய விருது மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகருக்கான விருதினை அசுரன் படத்துக்காக தனுஷ் பெற்றுள்ளார். ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான விருதினை தனுஷ் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்துக்காக விஜய் சேதுபதிக்குக் கிடைத்துள்ளது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

சிறந்த திரைப்படமாக அசுரன் தேர்வாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகி பெரிய வசூல் சாதனையையும், வெற்றியைப் பெற்றது அசுரன். கூடுதல் கெளரவமாக சிறந்த படத்துக்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளது.

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் விஸ்வாசம். இந்தப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) பிரிவில் டி.இமான் தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.

பார்த்திபன் இயக்கி, நடித்து வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்குச் சிறப்பு நடுவர் தேர்வு விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரே ரூமில் முழு படத்தையும் வித்தியாசமாக எடுத்து கவனம் ஈர்த்தப் படம். அதோடு, இந்தப் படத்துக்காக சிறந்த ஒலியமைப்புக்கு ரசூல் பூக்குட்டி விருது பெற்றுள்ளார்.

சிறந்த குழந்தை நட்சத்திரமாக கேடி (எ) கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

செவ்வாய் 23 மா 2021