மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

அய்யப்பனும் கோஷியும் இந்தி ரீமேக்கில் மீண்டும் இவர்களா?

அய்யப்பனும் கோஷியும் இந்தி ரீமேக்கில் மீண்டும் இவர்களா?

ப்ரித்விராஜும் பிஜுமேனனும் இணைந்து நடிக்க கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான படம் 'அய்யப்பனும் கோஷியும்'. ப்ரித்விக்கு முந்தைய படமான டிரைவிங் லைசன்ஸ் படத்தை எழுதிய சச்சு, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படமானது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இதில், பாலிவுட் வெர்ஷனில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அய்யப்பனும் கோஷியும் படத்தின் கதை இதுதான். செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் கோஷி குரியன். ஊட்டிக்குத் தன்னுடைய டிரைவருடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, அட்டாப்பாடி வழியாகச் செல்கிறார். ஆல்கஹால் தடைசெய்யப்பட்ட பகுதி அது. முழு போதையில், பை நிறைய பாட்டிலுடன் எஸ்ஐ அய்யப்பனிடம் சிக்குகிறார். கோஷியை அடித்து இழுத்துச்சென்று இரவு முழுக்க காவல் நிலையத்தில் அமர வைக்கிறார். அவர் மீது வழக்கும் போட்டு விடுகிறார். ஐயப்பனுக்கு அப்பறமாகத்தான், கோஷி பெரிய இடத்துப் பையன் என்பது தெரியவருகிறது. இதன்பிறகு, இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் நடக்கும் ஈகோ மோதல்தான் களம். Slow Burn படமான இதில் அய்யப்பனாக பிஜுமேனனும், கோஷியாக ப்ரித்விராஜும் நடித்திருந்தார்கள்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமை பொல்லாதவன், ஆடுகளம் படத்தின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றிருக்கிறார். ஆனால், யார் நடிக்கிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. சசிகுமார் நடிப்பார் என ஒரு பேச்சு இருக்கிறது.

தெலுங்கு ரீமேக் உரிமை சூர்யதேவர நாகவம்சி கைவசம் இருக்கிறது. இதில், பாகுபலி நாயகன் ராணா மற்றும் பாலகிருஷ்ணா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாலிவுட் வெர்ஷனில் அபிஷேக் பச்சன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியில் இரட்டை நடிகர்கள் நடிக்கும் படங்கள் சகஜமாக இருக்கும். ஏற்கெனவே அபிஷேக்கும் ஜான் அபிரகாமுமே 'தோஸ்தானா' படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது.

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

செவ்வாய் 23 மா 2021