மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

சதீஷை கதாநாயகனாக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்!

சதீஷை கதாநாயகனாக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்!

தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வருகிறவர்களுக்கு முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கிடைப்பது இல்லை. இரண்டாம் நிலையில் வளர்ந்து வரும் நடிகர்கள் ஒரு படம் நடித்து வெளியானவுடன் கோடிகளில் சம்பளம் கேட்க தொடங்கி விடுகின்றனர்.

ஆனால் அவர்கள் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு வியாபாரம் இருப்பது இல்லை. அதனால் காமெடி வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து படம் தயாரிக்கும் போக்கு கவுண்டமணி காலத்தில் தொடங்கியது. ஆனால் வியாபார ரீதியாக வெற்றி கிடைக்காததால் காமெடி பயணத்தைத் தொடர்ந்தார் கவுண்டமணி. அவரை தொடர்ந்து காமெடி நடிகர்கள் விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு, ஆகியோர் கதாநாயகனாக நடித்து வந்தாலும் சந்தானம் மட்டுமே வியாபார ரீதியாக நாயகனாகத் தொடர முடிகிறது.

மற்றவர்களால் நாயகன் பிம்பத்தை தொடர முடியவில்லை. இந்த நிலையில் 2006ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சதீஷ், அவருக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி, ஆர்யா உட்பட பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததால் எல்லோருக்கும் தெரிந்த நடிகராக இருக்கிறார்.

அவரைக் கதாநாயகனாக வைத்து இணையதளத் தொடர் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது திரைப்படங்களிலும் அவர் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் பெரிய நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிக்கும் படத்தில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பது தான் ஆச்சரியமான விஷயம். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திருட்டு பயலே, தனி ஒருவன், பிகில் என படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்.

அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒன்றல்ல இரண்டு படங்களில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்நிறுவனம் தயாரித்த பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார் சதீஷ். இரண்டு படங்களுக்கான கதை மற்றும் இயக்குநர்கள் முடிவாகிவிட்டதெனச் சொல்கிறார்கள். விரைவில் இவர் நாயகனாக நடிக்கவிருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது

முன்னணி நடிகர்கள் கால்ஷீட்டுக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருப்பதாலும், அவர்கள் கேட்கும் சம்பளம்-தயாரிப்பு செலவு அளவுக்கு, வியாபாரம் இன்றைய சினிமாவில் இல்லை என்பதால், அதில் ஏஜிஎஸ் நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர் தயாரிப்பு வட்டாரத்தில். பரிசோதனை முயற்சியாகக் கதையை நம்பி காமெடி நடிகர் சதீஷை கதாநாயகனாகக் களமிறக்குகிறது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 22 மா 2021