மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

விஜய் சேதுபதிக்காக விட்டுக் கொடுத்த மாஸ்டர் தயாரிப்பாளர்!

விஜய் சேதுபதிக்காக விட்டுக் கொடுத்த மாஸ்டர் தயாரிப்பாளர்!

விஜய் & விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த வருட பொங்கலுக்கு வெளியானது மாஸ்டர். ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், வசூலிலும் பெரிய சாதனையைப் படைத்தது. இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரித்திருந்தார்.

மாஸ்டர் படத்தின் முழு தயாரிப்பு பொறுப்பையும் ஏற்று படத்தை வெற்றிகரமாக வெளியிட்டது லலித்குமார் தான். இவரின் தயாரிப்பில் இரண்டு படங்களில் விஜய்சேதுபதி நடித்துவருகிறார். ஒன்று, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா & சமந்தாவுடன் விஜய்சேதுபதியின் ரொமாண்டிக் படமாக ‘காத்துவாக்குல ரெண்டுகாதல்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இரண்டாவது, விஜய் சேதுபதி, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவிட்ட ‘துக்ளக் தர்பார்’. டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியிருக்கும் இப்படம், அரசியல் சார்ந்த களத்துடன் உருவாகியிருக்கிறது. நடப்பு அரசியலை பகடி செய்யும் விதமாக படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார் தயாரிப்பாளர் லலித்.

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் லாபம். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் போதுதான், எதிர்பாராத பேரிழப்பாக எஸ்.பி.ஜனநாதனின் மறைவு ஏற்பட்டது. கேப்டன் இல்லாத கப்பலாக திசைமாறிவிடக்கூடாது என்பதால், இந்தப் படத்தை உடனடியாக வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி, ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்வதாகவும் அறிவித்தது. இந்த ஏப்ரல் ரிலீஸ் உறுதியாவதற்கு பின்னணியில் பெரிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பெரிய ஹீரோக்களின் படங்கள் எக்கச்சக்கமாக ஏப்ரல் மாதத்தை இலக்காகக் கொண்டுத் தயாராகிவருகிறது. இந்நிலையில், துக்ளக் தர்பார் ரிலீஸாக இருக்கும் தேதியில் தான் லாபம் வெளியாக இருக்கிறது. இதற்காக, தயாரிப்பாளர் லலித்திடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார் விஜய்சேதுபதி. அவருக்காக, துக்ளக் தர்பார் வெளியாக வேண்டிய தேதியை விட்டுக் கொடுத்திருக்காராம் லலித். அதன்படி, லாபம் படத்தை ஏப்ரல் ரிலீஸ் என்பதை படக்குழு உறுதி செய்தது. ஆக, எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படைப்பான லாபத்தை ஏப்ரல் 30ல் திரையில் எதிர்பார்க்கலாம்.

- தீரன்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

திங்கள் 22 மா 2021