மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

தேர்தல் செலவை மீட்க ஐடியா: அப்டேட் குமாரு

தேர்தல் செலவை மீட்க ஐடியா: அப்டேட் குமாரு

மாஸ்க் போடாம வெளியே வரவங்களுக்கு 200 ரூபா அபராதம் என தமிழ்நாடு ஃபுல்லா அறிவிச்சிருக்காங்க. தேர்தலுக்காக பிரச்சாரம் பண்ற தலைவர்களோடு கூட்டத்தில அபராதம் வசூலிக்க ஆரம்பிச்சா தேர்தலுக்கு ஆகுற செலவை அரசாங்கம் ஈசியா சம்பாதிச்சுடலாம். ஆனா செய்வாங்களா?

நீங்க அப்டேட் பாருங்க

உள்ளூராட்டக்காரன்

லேடீஸ் அவங்க பிறந்த ஊர் பெருமை பேசுறதெல்லாம் ஆயிரம் 'வெற்றிநடை போடும் தமிழகமே' விளம்பரத்துக்கு சமம்

நாகராஜ சோழன் MA.MLA

"பேச்சு பேச்சா தான் இருக்கணும், 4 அடி தள்ளியே நில்லு, டச் பன்ற வேலை எல்லாம் இருக்கப்படாதுண்ணு" மறுபடியும் சொல்ல வெச்சிரும் போல இருக்கு இந்த கொரானா

கடைநிலை ஊழியன்

ஒரு விவசாயி கிட்ட பேசுறோம் னு மறந்துட்டு பேசுறீங்க..

எது வீட்டுல நாலு தக்காளி செடி, பாவக்காய் செடி வளர்த்தா விவசாயியா..

balebalu

பச்சோந்தி நவ் :

தேர்தல் நேரத்துல மட்டும் நம்ம பெயரை எல்லாரும் அடிக்கடி சொல்லுறாங்களே?

என்னவா இருக்கும் ?

Memes Tamizha

சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான் - ஈபிஎஸ்

சிஏஏவுக்கு ஆதரவு அளிச்ச கட்சியும் அதிமுக தான்.. போவியா

ச ப் பா ணி

தொகுதிக்கு வராத எம்.எல்.ஏக்களை விட

பிரச்சாரத்துக்கே வராமல் எம்.எல்.ஏ ஆனவர்களே அதிகம்

மயக்குநன்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கிறேன்!- தமாகா பொதுச்செயலாளர் ஞானசேகரன் அறிவிப்பு.

'தாமாக' எடுத்த முடிவா பாஸ்..?

தர்மஅடி தர்மலிங்கம்

செஞ்சதை எப்பவுமே சொல்லிக்காட்டினா அவங்க சொந்தக்காரங்க தேர்தல் நெருங்கும் போது மட்டும் சொல்லிக்காட்டினா அவங்க அரசியல்வாதிங்க!

Dr. M. A. N. Loganathan

கோழிகளுக்குத் தீனி போடுவதே அது நமக்குத் தீனி ஆவதற்குத்தான்

ஓட்டுக்குத் துட்டு

mohanram.ko

90s கிட்ஸ்- விளக்கேற்ற வரலாமானு, என்னை பார்த்து ஒரு பொண்ணு கேட்டதுக்கு, கொரோனாவை நாங்களே விரட்டிக்கிறோம்னு சொல்லிட்டேன்....

மயக்குநன்

அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும்!- ராகுல் காந்தி.

ஆகா... இந்தப் புயல் அசாமிலும் 'மய்யம்' கொண்டிருக்கு போல..?!

ℳsd↬இதயவன்↫

புத்தங்கங்களை நீங்கள் எடைக்கு தான் போடமுடியும், புத்தகங்களால் மட்டுமே உங்களை எடை போட முடியும்..!!

-லாக் ஆப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 21 மா 2021