மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

இந்தியன் 2: சம்மதம் சொன்ன கமல்.. அதிர்ச்சி கொடுத்த ஷங்கர்

இந்தியன் 2: சம்மதம் சொன்ன கமல்.. அதிர்ச்சி கொடுத்த ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

2018-ல் ரஜினி நடிக்க எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை முடித்தார் ஷங்கர். அந்தப் படத்தை முடித்த கையோடு, கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 இயக்குவது உறுதியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதிலேயே பல சிக்கல்களும் தாமதங்களும் நடந்தன. அனைத்தையும் மீறி படப்பிடிப்பு துவங்கியதும், திடீரென சென்ற வருடம் பிப்ரவரியில் ஏற்பட்ட விபத்தினால் படப்பிடிப்பு நின்றது. அதன்பிறகு, படப்பிடிப்பு எதுவுமே நடக்கவில்லை.

இந்தியன் 2 ஷூட்டிங்கைத் துவங்க வேண்டுமென எத்தனையோ முறை இயக்குனர் தரப்பில் கோரியும், தயாரிப்புத் தரப்பான லைகா நிறுவனம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், ஜூன் மாதம் படப்பிடிப்பைத் துவங்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. உடனடியாக, லைகாவும் ஷங்கர் தரப்பில் ஜூன் மாதம் துவங்கிவிட கேட்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறார் ஷங்கர்.

இந்தியன் 2 ஷூட்டிங்கை இப்போதைக்கு துவங்க முடியாதென்றும், 2023ல் துவங்கலாம் என்றும் கூறியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அதற்கு காரணமும் சொல்லப்படுகிறது. என்னவென்றால், ஜூன் மாதம் ஷங்கரின் மகளுக்குத் திருமணம். அதன்பிறகு, தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரண் நடிக்கும் படத்தை ஆறு மாதங்களில் முடித்துக் கொடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்நியன் படத்தின் பாலிவுட் ரீமேக்கையும் ஷங்கர் தான் இயக்குகிறார். ரன்வீர்சிங் நடிக்க ‘அந்நியன்’ இந்தி வெர்ஷனை ஒரு வருடத்துக்குள் முடித்துக் கொடுக்கவும் ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார். அதனால், அடுத்த ஒரு வருடம் முழுவதும் பிஸி.

இந்தியன் 2-வுக்காக ஷங்கர் காத்திருந்தபோது படம் துவங்கவில்லை. இப்போது, அடுத்தடுத்து இரண்டு படங்களை கமிட் செய்துவிட்டாராம். அதனால், இந்தியன் 2 எப்போது துவங்கும் என்பதில் சிக்கல் எழுகிறது.

எது எப்படியோ, ஜூனில் இந்தியன் 2 துவங்காது. அதன்பிறகு, ஷங்கருடன் தயாரிப்புத் தரப்பு இறங்கி வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டால் மட்டுமே, இந்தியன் 2 சாத்தியம் என்பதே இப்போதைய நிலை.

- தீரன்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

ஞாயிறு 21 மா 2021