iபிக் பாஸ் சீசன் 5: கமலுக்குப் பதில் இவரா?

entertainment

சின்னத்திரையில் அதிக பரபரப்புடன் பேசப்படும் டிவி ஷோ ‘பிக் பாஸ்’. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் குறித்தப் பேச்சுவார்த்தை இப்போதே துவங்கிவிட்டது.

பிக் பாஸ் தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பொதுவாக ஜூன் மாதம் துவங்கி அக்டோபரில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடையும். கொரோனா அச்சுறுத்தலால் நான்காவது சீசன் துவங்கியதே அக்டோபர் 4ஆம் தேதி தான்.

நான்காவது சீசன் மொத்தமாக 106 நாட்கள் நடைபெற்றது. கடந்த சீசனில், மொத்தமாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா சம்பத், ஆஜித் ஷிவானி, கேப்ரியல்லா, ரியோ ராஜ், ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோம் ஷேகர் உள்ளிட்டோர்கள்.

2017இல் நடந்த முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வானார். இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ் ஆகியோர் வெற்றிபெற்றார்கள். நான்காவது சீசனில் நடிகர் ஆரி டைட்டில் வின்னராகி 50 லட்சத்தைப் பெற்றுச் சென்றார். மூன்றாவது சீசனில் 20 கோடி வாக்குகள் வந்திருந்த நிலையில், நான்காவது சீசனில் 30 கோடிக்கும் மேல் வாக்குகள் வந்ததாகக் கமல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5-க்கானப் பேச்சுவார்த்தைகள் இப்போதே துவங்கிவிட்டது. இந்தமுறை, ஜூன் மாதமே சீசனை துவங்கிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்களாம். அதோடு, குக்வித் கோமாளி புகழ் கனி, பவித்ரா உள்ளிட்டோர்களையும் இந்த சீசனில் இடம்பெற வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த சீசனில் பெரிய மாற்றமொன்று நடக்கவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் கமல்ஹாசன். இந்த தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றிப் பெற்றால் தீவிர அரசியலில் ஈடுபடுவார். அதனால், அடுத்த சீசனைத் தொகுத்துவழங்குவது கஷ்டம். ஆகையால், புதிய நபரைத் தேடும் பணியை துவங்கியிருக்கிறது பிக்பாஸ் டீம்.

ஆக, கமல்ஹாசனுக்குப் பதில் பேச்சில் நேர்த்தியும், சுவாரஸ்யமாகப் பேசும் நபராகவும் வேண்டும் என்று தேடிவரும் குழுவினர், சிம்புவை தேர்ந்தெடுக்கப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது.

வெள்ளித்திரையில் நாயகர்களாக இருக்கும் பலர், சின்னத்திரை நோக்கி படையெடுத்துவருகிறார்கள். குக் வித் கோமாளி மாதிரியான குக்கிங் ஷோ ஒன்றைத் துவங்குகிறது சன் டிவி. அதில் விஜய்சேதுபதி தொகுப்பாளராக வருவதாகக் கூறியிருந்தோம். தற்பொழுது, சிம்புவும் களமிறங்குவார் என்கிறார்கள். ஒருவேளை, இந்த தேர்தலில் மய்யம் கொள்ளவில்லையென்றால், பிக்பாஸ் சீசன் 5-ல் கமல்ஹாசனை எதிர்பார்க்கலாம்.

– ஆதினி

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *