மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

விஜேவாக விஜய்சேதுபதி, கெஸ்டாக சிவகார்த்திகேயன்

விஜேவாக விஜய்சேதுபதி, கெஸ்டாக சிவகார்த்திகேயன்

தமிழின் சின்னத்திரையுலக ஜாம்பவான் என்றால் அது, சன் டிவி நிறுவனம் தான். சின்னத்திரை மட்டுமின்றி திரைத்துறையிலும் தயாரிப்பாளராக பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துவருகிறது.

பொதுவாக, டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவிதான் எப்போதுமே டாப். ரேட்டிங் கணக்கில் 1100 புள்ளிகள் வரை சன் டிவி பெற்று முன்னிலையில் இருக்கும். இதைத் தொடர்ந்து, விஜய் டிவி ரேட்டிங்கில் 650 - 800 வரையிலான டி.ஆர்.பி ரேட்டிங் புள்ளிகளைக் கொண்டிருக்கும். சமீப காலமாக, விஜய் டிவியின் ரேட்டிங் ஆயிரத்தைத் தொட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. விஜய் டிவிக்கு மிகப்பெரிய முன்னேற்றம், சன் டிவிக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், புதிது புதிதாக நிகழ்ச்சிகளை துவங்கலாம் என்று திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறது.

முன்னதாக, ஏற்கெனவே நம்முடைய தளத்தில் குறிப்பிட்டிருந்தோம். விஜய் டிவியின் ஹிட் ஷோ ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியைப் போன்றதொரு குக்கிங் நிகழ்ச்சியை சன் டிவி உருவாக்கி வருகிறது. இதில், விஜய்சேதுபதி தொகுப்பாளராக இடம்பெற்றிருப்பதாகத் தகவல் கிடைத்ததாக கூறியிருந்தோம். மேலும் கிடைத்த அப்டேட் என்னவென்றால், வாரம் இரண்டு நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறாராம் சேதுபதி. அதற்கு மூன்று கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாகவும் ஒரு தகவல்.

இந்நிலையில், அடுத்தாகவும் ஒரு நிகழ்ச்சியொன்றைத் திட்டமிட்டிருக்கிறது சன் டிவி. சினிமாவில், சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை அழைத்துவந்து ஒன் டு ஒன்னாக வெளிப்படையாக பல கேள்விகளை கேட்கும் நேர்காணல் வடிவிலான நிகழ்ச்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கூடுதல் தகவலாக, முதல் பிரபலமாக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார்.

ஏன் சிவகார்த்திகேயன் என விசாரித்தால்.... சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாகத் தோல்விப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த போது பெரிய ஹிட் கொடுத்தது ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சன் டிவி தான். அந்த உதவிக்கு பிரதிபலனாக சன் டிவியின் புதிய நிகழ்ச்சியில் பங்குகொள்கிறாராம்.

சிவகார்த்திகேயன் கெஸ்டாக கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

-ஆதினி

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

சனி 20 மா 2021