மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

கிரிக்கெட் களம்: ஜெயிக்கப் போவது யாரு?

கிரிக்கெட் களம்: ஜெயிக்கப் போவது யாரு?

டி20 தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று (மார்ச் 20) இரவு மோதுகின்றன.

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது, மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்தும், இரண்டாவது, நான்காவது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று (மார்ச் 20) இரவு நடக்கிறது.

முதல் மூன்று ஆட்டங்களில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றன. இதனால் ‘டாஸ்’ முக்கியத்துவம் பெற்றது. ஆனால் நேற்று முன்தினம் (மார்ச் 18) நடந்த நான்காவது ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட் செய்து அசத்தியது.

அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவின் அரை சதத்தின் உதவியுடன் 185 ரன்கள் குவித்த இந்தியா, எதிரணியை 177 ரன்களில் மடக்கி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய வீரர்கள் இன்று கூடுதல் உத்வேகத்துடன் களம் இறங்குவார்கள்.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் பேட்டிங், பந்து வீச்சில் சவால்மிக்க அணியாகவே தென்படுகிறது. மொத்தத்தில் சரிசம பலம் பொருந்திய அணிகள் மல்லுகட்டுவதால் இன்றைய கிரிக்கெட் களத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய ஐந்து தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி தனது கடைசி எட்டு டி20 தொடர்களை இழந்ததில்லை. எனவே யாருடைய வெற்றிப்பயணம் முடிவுக்கு வரும் என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

- ராஜ்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 20 மா 2021