மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

விரைவில் மிரட்ட வரும் வேட்டையன்.. சந்திரமுகி 2 அப்டேட்!

விரைவில் மிரட்ட வரும் வேட்டையன்.. சந்திரமுகி 2 அப்டேட்!

2005ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த படம் சந்திரமுகி. சூப்பர்ஸ்டார் ரஜினியை முற்றிலும் வேறு பரிமாணத்தில் இந்த திரைப்படம் காட்டியது. இந்த பிளாக்பஸ்டர் படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா மாளவிகா, வினித் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும். மலையாளப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றாலும் சந்திரமுகி படத்துக்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 15 வருடங்கள் கழித்து இந்த படத்தின் அடுத்த பாகம் பற்றிய அறிவிப்பு அண்மையில் வெளியானது. தமிழ் சினிமாவில் வரிசையாகப் பேய் படங்களை கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ் தான் சந்திரமுகி படத்தின் அடுத்த பாகத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பி.வாசு இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

முன்னதாக, பல்வேறு காரணங்களால் சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 எந்த சூழ்நிலையிலும் நிறுத்தப்படாது, படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவித்தார்.

சமீபத்திய அப்டேட் என்னவென்றால் சந்திரமுகி 2 படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளதாம்.

ராகவா லாரன்ஸ் தற்போது கதிரேசன் இயக்கத்தில் உருவாகிவரும் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். ருத்ரன் முடித்த கையோடு சந்திரமுகி 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. புகைப்படத்தில் பிரபு தன் குடும்பத்துடன் அரண்மனைக்குள் வருவார் . சந்திரமுகி 2 படத்தின் கதைப்படி ஒரு குடும்பம் புதிதாக சந்திரமுகி அரண்மனைக்குள் குடியேறி வேட்டையனால் தொந்தரவு செய்யப்படுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 19 மா 2021