மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

ஏப்ரலில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ ரியோ நடிக்கும் படம் !

ஏப்ரலில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ ரியோ நடிக்கும் படம் !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்தவர் ரியோ. தொலைக்காட்சியில் விஜேவாக பயணத்தைத் துவங்கியவர் நடிகராகவும் வளர்ந்துவருகிறார். இவர் ஹீரோவாக நடிக்க ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம். 2019ல் வெளியான இந்தப் படத்தில் ரியோவுடன் ஆர்.ஜே.விக்னேஷ் மற்றொரு லீடாக நடித்திருந்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகுதான், பிக்பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பே படமாக்கப்பட்ட படம் தான் ‘ப்ளான் பண்ணிப் பண்ணனும்’.இந்தப் படத்தில் ரியோவுடன் ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரோபோ சங்கர், நரேன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருந்தார். அதோடு, படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

இந்தப் படத்தினை ஏப்ரலில் வெளியிட இருக்கிறது படக்குழு. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தேர்தலை இலக்காகக் கொண்டு பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கிறது. இந்த லிஸ்டில் சின்ன பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ரியோவின் படமும் இணைகிறது.

- ஆதினி

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

வெள்ளி 19 மா 2021