மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

ஒருநாள் போட்டியில் தமிழக வீர‌ர்கள்!

ஒருநாள் போட்டியில்  தமிழக வீர‌ர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீர‌ர்கள் பட்டியலில் தமிழக வீர‌ர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ புனேயில் வெளியிட்டுள்ளது.

அதில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், சுப்மான் கில், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், யுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வரும் 23ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி 26ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 28ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் புனேவில் நடக்கிறது.

தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.

-ராஜ்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 19 மா 2021