மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

சூர்யாவா, தனுஷா ? வெற்றிமாறனின் புதிய திட்டம் !

சூர்யாவா, தனுஷா ? வெற்றிமாறனின் புதிய திட்டம் !

திரைத்துறைக்குள் வந்து 14 வருடங்கள் கடந்துவிட்டாலும் வெறும், 5 படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என இயக்கிய எல்லாப் படங்களுமே ஹிட். அதோடு, நெட்ஃப்ளிக்ஸ் ஆந்தாலஜிக்காக இவர் இயக்கிய ‘ஓர் இரவு’ கதையும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்பொழுது, சூரி ஹீரோவாக நடிக்க ஒரு படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். சூரியோடு முக்கிய லீட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார். சத்யமங்கலம் காடுகளில் படத்துக்கானப் படப்பிடிப்பு நடந்துவந்தது. முதல்கட்டப் படப்பிடிப்பை முடிந்துவிட்டது படக்குழு. இன்னும், 40% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜெயமோகனின் ‘துணைவன்’ கதையைத் தழுவி படத்தை உருவாக்கிவருகிறார் வெற்றிமாறன். இப்படத்துக்கான இசைக் கோர்ப்புப் பணிகளை இளையராஜா மேற்கொண்டு வருகிறார். இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் உருவாகும் முதல் படமிதுதான்.

அடுத்ததாக, வெற்றிமாறன் கையில் இரண்டு படங்கள் இருக்கிறது. சூர்யா நடிப்பில் தாணு தயாரிப்பில் ‘வாடிவாசல்’ மற்றும் தனுஷ் நடிப்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் படம். இவ்விரண்டில் எந்தப் படத்தை முதலில் துவங்கும் என விசாரித்தால், தனுஷ் படம் முதலில் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

சூர்யா கலந்துகொள்ள வாடிவாசல் படத்துக்கான லுக் டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தை உடனடியாக துவங்குவது சாத்தியமில்லை என்கிறார்கள். ஏனெனில், வாடிவாசல் படத்துக்கு நிறைய முன் தயாரிப்புகள் தேவையாம். அதோடு, படப்பிடிப்புக்கும் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு காட்சிக்கும் ஆயிரத்துக்கும் மேல் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் தேவைப்படுகிறார்களாம். தற்பொழுது, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா என்பதும் நினைவுகூரத்தக்கது.

ஆக, சூரி படத்தை முடித்த கையோடு, அசுரன் மாதிரி குறுகிய காலத்தில் எடுத்து முடித்துவிடுவது போல ஒரு படமொன்றை தனுசை வைத்து இயக்குகிறார் வெற்றிமாறன். இதுதான் இப்போதைய சூழல். அதோடு, தனுஷ், சூர்யா படங்களை ஒரே நேரத்தில் துவங்கவும் கூட வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

- தீரன்

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

வெள்ளி 19 மா 2021