மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

வலிமை எப்போது முடியும்? வில்லன் சொன்ன அப்டேட்!

வலிமை எப்போது முடியும்? வில்லன் சொன்ன அப்டேட்!

அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை, படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. போனிகபூர் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்றை வெளியிட்டார் தயாரிப்பாளர் போனிகபூர். அதில், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விளம்பரப் பணிகள் மே 1 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படத்தில் வில்லனாக நடித்துவரும் கார்த்திகேயா புதிய அப்டேட் ஒன்றைத் தெரிவித்துள்ளார். “ நான் சந்தித்ததிலேயே மிகவும் எளிமையானவர் அஜித். அவருடன் வலிமையில் நடித்தது அற்புதமான அனுபவம். இன்னும் மூன்று நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. சேசிங் காட்சிகளைப் படமாக்க இருக்கிறோம். ஸ்பெயின் நாட்டில் படமாக்க வேண்டுமென்பதால் அந்த நாட்டின் அனுமதியைக் கேட்டிருக்கிறோம்.. அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு முடிந்துவிடும்” என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், ஸ்பெயின் ஷூட்டிங்கோடு படமானது முடிவது உறுதியாகியிருக்கிறது. ஏற்கெனவே சொன்னமாதிரி, முழு படத்தையும் மே மாதத்துக்கு முன்பே முடித்துவிடுவார்கள். அதன்பிறகே படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரெல்லாம் வெளியாக இருக்கிறது.

தெலுங்கு நடிகரான கார்த்திகேயா ஆர்.எக்ஸ் 100, கேங்க் லீடர் , 90எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் . இவர், தமிழில் வலிமை படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 19 மா 2021