மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

பெயரில் மாற்றம் சொல்லும் லெஜண்ட் சரவணா

பெயரில் மாற்றம் சொல்லும் லெஜண்ட் சரவணா

சரவணா ஸ்டோர்ஸ் தொழிலதிபர் ‘லெஜண்ட்’ சரவணன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோவாக லெஜண்ட் சரவணன், நாயகியாக ஊர்வசி ரடேலா மற்றும் பிரபு, விவேக், மயில்சாமி, விஜயகுமார், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்க உருவாகிவரும் படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கிவருகிறார்கள்.

மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றவர் நாயகியாக நடிக்கும் ஊர்வசி ரடேலா. அதுமாதிரி, அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விசில் படங்களை இயக்கிய,மேலும் ஏராளமான விளம்பர படங்களை இயக்கியவர்களே ஜேடி - ஜெர்ரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கான விளம்பர படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர், இப்போது ஹீரோ ஆகிவிட்டார். கடந்த டிசம்பர் மாதத்தில் படத்துக்கானப் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரு பாடல் மற்றும் இரண்டு சண்டைக் காட்சிகளை படமாக்கி முடித்திருக்கிறது படக்குழு. சென்னை, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியவர்கள், தற்போது குலு மணாலியில் இருக்கிறார்கள்.

குலு மணாலி ஷெட்யூலிலும் பாடல் காட்சியும், சண்டைக் காட்சியும் எடுத்துவருவதாக தகவல். புது தகவல் என்னவென்றால், இந்தப் படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமென்று சொல்கிறார்கள். அதோடு, நாயகி ஊர்வசி மைக்ரோ பயாலஜிஸ்டாக நடித்துவருகிறாராம்.

படத்திலிருந்து புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தை மிரட்டிவருகிறது. அப்படி, புகைப்படங்கள் வெளியாகும்போது சரவணன் அருள் என்று குறிப்பிடாமல் சரவணன் என்று மட்டும் பெயரை குறிப்பிடுமாறும் படக்குழுவுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் நம்ம லெஜண்ட் சரவணா.

-ஆதினி

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 19 மா 2021