மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

ஊரடங்கு பர்த்டே: அப்டேட் குமாரு

ஊரடங்கு பர்த்டே:  அப்டேட் குமாரு

எவனோ ஒரு புண்ணியவான் சென்னையில முழு லாக் டவுன் அப்படின்னு கொளுத்தி போட்டுட்டான். உடனே வதந்தி பரப்பினால் கைது செய்யப்படுவார்கள்னு எச்சரிக்கிறாங்க அதிகாரிங்க. சென்னையில் இருக்கிறவங்க எல்லாம் மறுபடியும் மூட்டை முடிச்சு கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க வதந்தியும் பரப்ப வேணாம்... கொரோனாவைம் பரப்ப வேணாம். வர்ற மார்ச் 22 ஊரடங்கோட முதல் பர்த் டே வருது... அதுக்கு யார் யார் என்னென்ன ஸ்டேட்டஸ் போடுவாங்களோனுதான் எனக்கு பயமா இருக்கு.

நீங்க அப்டேட் பாருங்க

சரவணன். ℳ

"என்னை ரூ.10 கோடிக்கு விலை பேசினார்கள்" - சினேகன்.

கமல்ஹாசன் ~ " யாருய்யா, அவங்க...எனக்கே பார்க்கணும் போல இருக்கு... "

கோழியின் கிறுக்கல்!!

தேர்தலை பின்னுக்கு தள்ளிவிட்டு,

கொரோனா சிறிது சிறிதாக தலைப்பு செய்தி நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது!!

நாகராஜ சோழன் MA.MLA

அரசியலில் எப்படி நடக்கவேண்டும் என ஜெயலலிதா பயிற்சி அளித்துள்ளார்.- முதல்வர் பழனிசாமி.

எடா கோபி, அம்மா முன்னாடி இவங்க யாரும் நடந்து நான் கண்டில்லா... நீ நோக்கியோ???

balebalu

அனைவரும் மாஸ்க் அணிந்து , தடுப்பூசி போட்டு corona anniversary கொண்டாடுவோம் !

Corona

Memes Tamizha

எதிர்வரும் தேர்தலில் 234 தொகுதியிலும் அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெறும் - பிஜேபி மேலிட பொறுப்பாளர் பேச்சு

~சிரிச்சா தானஜி அடுத்த ஜோக் சொல்லுவிங்க!

மதுரைவீரன்தானே

Arulraj

காதல் ஆனாலும் தேர்தல் ஆனாலும் 'பொய்கள்' இனிக்க தான் செய்கிறது

தேர்தலும்காதலும்

ச ப் பா ணி

ஊர்ல வெயில் எப்பிடி,

தொகுதி நிலவரம் எப்பிடி..

நவீன விசாரிப்புகள்

Memes Tamizha

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பழனிச்சாமி தான் முதல்வர் என ஜோதிடர் சொல்லிவிட்டார் - ஆர்.பி உதயகுமார்

~ அப்புறம் எதுக்கு ஊரு ஊரா வந்து பிரச்சாரம் பண்ணுறிரு.. ஓட்டு கேக்கமா இருக்க வேண்டிய தானே!

சரவணன். ℳ

"இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது" - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

"இந்தியா தான் தனியார்மயமாக்கப்படும்...!"

கோழியின் கிறுக்கல்!

'அவர் கிட்ட கேட்டு சொல்றேன்!' என்பது தான் திருமணமான பெண்களின் ஆகம்பெரும் பொய்!!

-பிரியா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

வியாழன் 18 மா 2021