மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

பாலிவுட்டில் ரீமேக்காகும் ‘அந்நியன்'

பாலிவுட்டில் ரீமேக்காகும் ‘அந்நியன்'

திரையில் பிரம்மாண்டத்தைக் காட்டும் காஸ்ட்லியான இயக்குநர் ஷங்கர். ஒவ்வொரு படத்திலுமே புதிதாக ஒரு பிரம்மாண்டத்தை முயற்சி செய்திருப்பார். தற்பொழுது, ஷங்கர் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது.

கமல்ஹாசன் நடிக்க ‘இந்தியன் 2’ படமும், ராம்சரண் நடிக்கும் படமும் உருவாகிவருகிறது. இதில், இந்தியன் 2 படம் பாதி கிணற்றைத் தாண்டிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு, மீதிப் படமும் முடிந்துவிடும். இதை முடித்த கையோடு, தில் ராஜூ தயாரிப்பில் ராம் சரண் நடிக்க மல்டிலிங்குவலாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறார் ஷங்கர்.

இந்நிலையில், இவரின் பழைய படத்தைத் தூசித்தட்டி வெளியில் எடுக்கிறது பாலிவுட். ஷங்கரின் ஹிட் லிஸ்டில் மிக முக்கியமானது அந்நியன். 2005ல் விக்ரம், சதா நடிப்பில் வெளியான இப்படம் கமர்ஷியலாக பெரிய வெற்றியைப் பெற்றது. அம்பி, அந்நியன், ரெமோ என மூன்று ரோல்களில் நடித்து அசத்தியிருப்பார் விக்ரம். சொல்லப் போனால், விக்ரமுக்கு கமர்ஷியலாக பெரிய ஹிட் கொடுத்த கடைசிப் படமும் இதுதான். அந்நியன் கொடுத்த ஹிட்டை இன்னும் விக்ரம் இதுவரை தரவில்லை.

அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தைகள் பாலிவுட்டில் துவங்கியிருக்கிறது. விக்ரம் ரோலில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பாலிவுட்டின் தயாரிப்பு நிறுவனமொன்று ஷங்கரை சமீபத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அணுகியிருக்கிறது. ஸ்கிரிப்ட்டில் கொஞ்சம் மாற்றம் செய்து, லேட்டஸ்ட் சமூக பிரச்னைகளை, டிரெண்டில் இருக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாக்கலாம் என்று பேசியிருப்பதாக தகவல். இன்னும், ஷங்கர் தரப்பில் உறுதியான முடிவெதுவும் எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வியாழன் 18 மா 2021