மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக்: தகவல் உண்மையா ?

விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக்: தகவல் உண்மையா ?

இப்போதைய நிலவரப்படி, தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை புரியும் காஸ்ட்லியான நடிகர் விஜய். ஒவ்வொரு வருடமும் தன்னுடைய வசூல் சாதனையை தானே பிரேக் செய்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் பிகில் கொடுத்த வசூலை தாண்டிச் சென்றது இந்த வருடம் லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர்.

அடுத்ததாக, விஜய் 65 படத்துக்குத் தயாராகி வருகிறார். ‘கோலமாவு கோகிலா’ இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘விஜய் 65’ படம் உருவாகி வருகிறது.

முதல்கட்டப் படப்பிடிப்புக்கு ரஷ்யா செல்ல இருக்கிறது படக்குழு. அதற்கான லொக்கேஷனை உறுதி செய்வதற்காக ரஷ்யா சென்று வந்தார் இயக்குநர் நெல்சன். மே மாதத்திலிருந்து படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், நடிக - நடிகையர்களை உறுதி செய்யும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பது உறுதி என்றே சொல்கிறார்கள்.

இந்த நிலையில், விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுதொடர்பாக விசாரித்தால் வில்லன் நடிகரை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லையாம். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி பெரிய வரவேற்பைப் பெற்றுவிட்டார். ஆக, இந்தப் படத்திலும் வில்லனுக்கு வெயிட்டேஜ் இருக்க வேண்டும் எனப் படக்குழு விரும்புகிறதாம். அதனால், வில்லனாக யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என ஒரு பட்டியலை தயார் செய்திருக்கிறார்கள். அதனால்தான், நவாசுதீன் பெயர் பரவியிருக்கிறது. அதனால், விஜய்க்கு வில்லனாக யாரையும் உறுதி செய்யவில்லை என்றே படக்குழுவினர் கூறுகிறார்கள்.

ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இந்த நிலையில், விஜய் படத்திலும் நடிக்கிறாரா என்பது அதிகாரபூர்வ தகவல் வெளியானால் மட்டுமே தெரியவரும்.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

புதன் 17 மா 2021