மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

எஸ்.ஜே.சூர்யா தரும் சர்ப்ரைஸ்.. கம்பேக் தரும் முன்னாள் ஹீரோயின்!

எஸ்.ஜே.சூர்யா தரும் சர்ப்ரைஸ்.. கம்பேக் தரும் முன்னாள் ஹீரோயின்!

சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகரென்பதையும் ரசிகர்களுக்கு நிரூபித்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா இல்லையென்றால், இந்தப் படம் தேர்ச்சிப் பெற்றிருக்காது என்பதே பலரின் கருத்து.

இயக்கத்தை கைவிட்டுவிட்டு, தொடர்ச்சியாக படங்களில் நடித்துவருகிறார். சிம்புவின் மாநாடு & சிவகார்த்திகேயனின் டான் படங்களில் வில்லனாக நடித்துவருகிறார். தற்பொழுது, டான் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இவர் நடிப்பில் பொம்மை படம் கூட உருவாக இருக்கிறது.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தைக் கொடுத்த புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்கள். ஆண்ட்ரூ இயக்கத்தில் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியிருக்கிறார். லீலை, கொலைகாரன் படங்களை இயக்கியவர் ஆண்ட்ரூ என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருக்காராம். கூடுதல் சர்ப்ரைஸ் என்னவென்றால், படத்தில் முக்கிய ரோலில் நடிகை லைலா நடிக்க இருக்காராம். இது, லைலாவுக்கு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்கிறார்கள். அஜித்துடன் 2006ல் வெளியான பரமசிவம் படத்தில் நடித்தார். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகியிருந்தார். அவ்வப்போது, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலைகாட்டினார்.

கூடுதல் அப்டேட் என்னவென்றால், இது வெப் சீரிஸாக உருவாக இருக்காம். அதோடு, உடனடியாக படப்பிடிப்பை துவங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். எப்படியும், ஏப்ரலில் படம் துவங்கும் என்றே சொல்லப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா - லைலா எனும் காமினேஷனே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தை உடனடியாக துவங்க இருப்பதால் டான், மாநாடு படப்பிடிப்பின் தேதிகளில் சின்ன அட்ஜெஸ்மெண்ட் செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டுகிறாராம் எஸ்.ஜே.சூர்யா.

நெஞ்சம் மறப்பதில்லை போலவே நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் மற்றுமொரு படம் இறவாக்காலம். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க உருவான படம். டிரெய்லரே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தாமதமாகிவரும் இந்தப் படமும் விரைவில் வெளியாகும் என நம்பலாம்.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

புதன் 17 மா 2021