மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

லோகேஷ் கனகராஜூக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்கள்!

லோகேஷ் கனகராஜூக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்கள்!

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இளம் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். இவரின் மூன்று படங்களுமே மெகா ஹிட். அட்லீ, ஹெச்.வினோத் மாதிரி ஷார்ட் டைமில் பெரிய இடத்துக்குச் சென்ற இயக்குநர்.

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் இந்தியில் ‘மும்பைகர்’ எனும் பெயரில் ரீமேக் ஆகிவருகிறது. அதில், விஜய்சேதுபதி ஒரு ரோலில் நடித்துவருகிறார்.

இரண்டாவது படம் கைதி. கார்த்தி நடிக்க உருவான இந்தப் படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையைப் படைத்தது. நாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல் உருவாகி பெரிய வெற்றியையும் பெற்றது.

கைதி வெளியாவதற்கு முன்பே, விஜய் படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதுதான், மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியைக் கொண்டுவந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் லோகேஷ். மாஸ்டர் படம் இவரை திரையுலகின் உச்சியில் கொண்டு சேர்த்துவிட்டது.

அடுத்தக் கட்டமாக, கமல்ஹாசன் நடிக்க ‘விக்ரம்’ படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அறிமுக வீடியோவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

லோகேஷ், ஹெச்.வினோத், ரத்னக்குமார் என இளம் இயக்குநர்கள் ஒற்றுமையாக இருப்பதும், எந்த வித ஈகோவும் இன்றி நட்புடன் பழகி வருவதும் தமிழ் சினிமாவுக்கு புதிது. கூடுதல் ஆச்சரியமும் நடந்தது. கடந்த மார்ச் 14ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் பிறந்த தினம். விஜய்யை இயக்கியவர் என்பதால் இணையத்தில் ரசிகர் வாழ்த்துகளை அதிகம் பகிர்ந்தனர். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்கள் ஒன்றிணைந்து லோகேஷ் கனகராஜூக்கு கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

மணிரத்னம் , லிங்குசாமி, கெளதம்மேனன், சசி மற்றும் வசந்தபாலன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இளம் இயக்குநரான லோகேஷூக்கு சீனியர்கள் கேக் ஊட்டிவிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். இப்படியான ஒரு சம்பவம் நடக்குமென லோகேஷ் நினைத்துக் கூட பார்க்கவில்லையாம். மணிரத்னத்தைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டதாகக் கூறியவருக்கு, மணிரத்னமே கேக் ஊட்டிவிடுவதெல்லாம் நிச்சயம் ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனான நிகழ்வு!

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

புதன் 17 மா 2021