மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

ஆஸ்கர் போட்டியில் இடம்பெறாத சூரரைப் போற்று!

ஆஸ்கர் போட்டியில் இடம்பெறாத சூரரைப் போற்று!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருட தீபாவளிக்கு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவுடன் அபர்ணா முரளி, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். முதன்முறையாக திரையரங்கில் வெளியாகாமல் ஒரு பெரிய பட்ஜெட் படம்... நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், லாபமாகவும் படம் பெரிய ஹிட்.

மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஆஸ்கர் போட்டியிலும் நுழைந்தது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் பல விதிமுறை தளர்வுகள் இருந்தன. அதன்படி, ஓடிடியில் வெளியாகும் படங்களும் ஆஸ்கரில் போட்டியிட்டன. அதன்படி, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டியிட்டது. பொதுப்பிரிவில் போட்டியிட்டு 366 படங்களில் ஒன்றாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அதில், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை எனும் மூன்று பிரிவுகளில் இறுதியாகப் போட்டியில் இருந்தது.

ஆஸ்கர் நாமினேஷனில் சூர்யாவின் சூரரைப் போற்று இடம்பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், ஆஸ்கர் போட்டிக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், சூரரைப் போற்று படம் இடம்பெறவில்லை. இதனால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.

ஆறுதலான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த நாமினேஷன் பட்டியலை இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து அறிவித்தார். இந்திய நடிகைக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததே பெருமைக்குரிய விஷயம்தான். சிறப்புமிக்க ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் ஏப்ரல் 25ஆம் தேதி நடக்க இருக்கிறது. சூரரைப் போற்று இடம்பெறாவிட்டாலும், ஆஸ்கரில் இடம்பெற்றப் படங்களைக் கொண்டாடுவோம்!

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

செவ்வாய் 16 மா 2021