மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

விஜய் 65: இன்னும் கதையை இறுதி செய்யாத நெல்சன்

விஜய் 65: இன்னும் கதையை இறுதி செய்யாத நெல்சன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் முதல்கட்டப் பணிகள் போய்க்கொண்டிருகிறது.

விஜய் - நெல்சன் காம்போ இணையும் தளபதி 65 படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். நாயகியாக நடிப்பதற்கு பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

படப்பிடிப்பு தேதிகள் முடிவானபோது, பூஜா ஹெக்டேவுக்கு அந்த தேதிகள் செட் ஆகிவிட்டதாம். எனவே அவர் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நெல்சன் திலீப்குமார், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதில் பிஸியாக இருக்கிறார். இதற்காக ரஷ்யாவுக்குச் சென்று லொகேஷன் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில் 'தளபதி 65' படத்துக்கான ஸ்கிரிப்டிங் பணிகள் இன்னும் முடியவில்லை என்று சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருக்கிறார். நெல்சன் திலீப்குமாரின் டாக்டர் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன், சமீபத்திய நிகழ்வொன்றில், "நெல்சன் திலீப் குமார் 'டாக்டர்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் 'தளபதி 65' படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ஒரே சமயத்தில் செய்து வருகிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே நெல்சன், 'தளபதி 65' படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை இன்னும் முடிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் அதை முடித்த பின்னரே படப்பிடிப்பு தொடங்கும். படக்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்கு ரஷ்யா செல்ல இருந்தார்கள். அது தள்ளிப்போவது இதன்மூலம் உறுதியாகியிருக்கிறது. ஆக, விஜய் 65 படமானது மே மாதத்துக்கு மேல்தான் தொடங்குகிறது.

அதோடு, ஆமை வேகத்திலேயே வேலைகளைச் செய்துவருகிறாராம். அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். தயாரிப்புத் தரப்பு நினைக்கும் வேகத்தை நெல்சன் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. வெற்றியைப் பெற வேகம் தேவையில்லை... நிதானம் போதும் என நினைக்கிறார் போலும்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

4 நிமிட வாசிப்பு

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

செவ்வாய் 16 மா 2021