மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

காமெடியன் தேர்தல் அறிக்கை இருக்கா?அப்டேட் குமாரு

காமெடியன் தேர்தல் அறிக்கை இருக்கா?அப்டேட் குமாரு

திமுக தேர்தல் அறிக்கை ஹீரோன்னும், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்னும் துரைமுருகன் சொல்லியிருக்காரு. அப்ப காமெடியன் தேர்தல் அறிக்கைனு எதைச் சொல்றதனு என் பையன்கிட்ட கேட்டேன். இல்லப்பா... இப்ப காமெடியன்னு தனியா யாரும் பண்றதில்லை. ஹீரோ பண்றது மொக்கையாச்சுன்னா அவனே காமெடியன் தான். வில்லன் பண்றது மொக்கையாச்சுன்னா அவனும் காமெடியன் தான்னு சொல்றான். அரசியல் தெரியாமல் பையனை வளர்க்குறோம்னு நம்பிக்கிட்டிருந்தேன். பயபுள்ள நல்லா பாலிடிக்ஸ் பண்ணுது.

நீங்க அப்டேட் பாருங்க

ஜோக்கர்..

ஒதுக்கப்பட்ட 40 தொகுதிகளில் 3 தொகுதிகளை திருப்பி கொடுத்துவிட்டேன் ~ சரத்குமார்

நாட்டாமை ~ 37 க்கே ஆளை தேடுறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சி?!

amudu

அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது. -மம்தா பானர்ஜி.

அடிபட்டது போல நடிக்கும் புலி, அடிபட்ட புலியை விட ஆபத்தானது.

ரஹீம் கஸ்ஸாலி

குளிர் காலத்தில் ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் ஃபீலிங்கை தரும் ரூம்தான் வெயில் காலத்தில் தந்தூரி அடுப்பில் இருக்கும் ஃபீலிங்கையும் தருகிறது.

பர்வீன் யூனுஸ்

பவர் பேங்கிற்கு 'செல்'லும் இடம் எல்லாம் சிறப்பு.

நாகராஜ சோழன் MA.MLA

சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை - கருணாஸ்

சரத் குமார்~

நீங்க மட்டுமா தேர்தல்ல நிக்கலை, நானும் தான் நிக்கலை.

balebalu

தமிழ் நாட்டுல 30 , 40 சீட்டுக்கே ஆள்கிடைக்காம திண்டாடுறாங்களே , உத்தர் பிரதேஷ் மாதிரி பெரிய மாநிலத்துல லாம் எப்படி சமாளிக்குறாங்க ?

ச ப் பா ணி

காலேஜ் போகும் பசங்களை என்ன படிக்கிறேனு கேட்பதற்கு பதில், "எதுக்கு படிக்கிறேனு" கேட்கலாம் #வேலைஇல்லை.காம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நம்மாளுகளுக்கு வேலை தெரியற அளவுக்கு இன்டர்வியூல பேச தெரியறதில்லை.

Tell me about yourself கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ளயே தவிச்சு தண்ணி குடிச்சுறானுக..

கடைநிலை ஊழியன்

வருஷத்துக்கு 1,00,000 ரூபாய் சம்பாதிச்சா, கடங்காரனா நிப்பேன்..

வருஷத்துக்கு 10,000 ரூபாய் சம்பாதிச்சா, சாப்பாட்டுக்கு வழியில்லாம நிப்பேன்..

வருஷத்துக்கு 1000 ரூபாய் சம்பாதிச்சா, தேர்தல்ல நிப்பேன்..

மயக்குநன்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் திமுகதான்!- எடப்பாடி பழனிசாமி.

'அம்மா' இட்லி சாப்பிட்டதுக்கும், ஜூஸ் குடிச்சதுக்கும்தான் அதிமுக காரணமா தலைவரே..?

கோழியின் கிறுக்கல்!!

வாழத் தெரியாம சாமியார போனவங்கிட்ட எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்!!!

கழகங்களின் தேர்தல் அறிக்கையில் தவறுதலாக விடுபட்டுப்போனவை ..

1) அமெரிக்காவில் பணி செய்ய

H1 B1 visa வில் தமிழர்களுக்கு 10.5%

உள் ஒதுக்கீடு வழங்க அதிபர் ஜோ பைடனை வலியுறுத்துவோம்.

2) நாசா விண்வெளி நிலையம் மூலம் நிலவுக்கு சென்று வர தமிழ்ர்களுக்கு மானியம் வழங்கப்படும்.

3) திருவள்ளுவர் பெயரில் தமிழர் இராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படும் ,

அதில் ஆயிரக்கணக்கான திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கண படைப்புகளும் வைத்து அனுப்பப்படும், தமிழ்செம்மொழி ஆனதால் பெற்ற நன்மைகள்போல் ,இந்த செயல் மூலம் ப்ரபஞ்சம் எங்கும் தமிழ் பரவும் .

4) அனைத்து வங்கி கடன் மட்டும் அல்ல நீங்கள் கைமாத்தாக பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படும் ,நீங்கள் மளிகை கடைகளில் டீ கடைகளில் வைத்து இருக்கும் பாக்கிகளையும் கழக அரசே செலுத்திடும்.

5) மாதம் இரண்டு படம் பார்க்க குடும்ப அட்டைக்கு இரண்டு சினிமா டிக்கெட் வழங்கப்படும் .

6)அமேசான் பிரைம்,நெட்பிளிக்ஸ்,டிஸ்னி ஹாட்ஸ்டார்.. சந்தா தொகையை கழக அரசே செலுத்தும்.

7)பள்ளி மாணவர்களுக்கு ஊக்க தொகையாக மாதம் 500 ரூபாய்,

கல்லூரி மாணவர்களுக்கு 750 ரூபாய் பாக்கெட் மணி கொடுக்கப்படும்

8) வீட்டு வாடகையில் 25% அரசாங்கமே செலுத்தும்.

9) ஐ நா பொதுச்செயலாளர் பதவியை தமிழர்க்கு வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்

10)வங்க கடலின் பெயரை மாற்றி , திராவிட தலைவர் ஒருவரின் பெயரை வைக்க வேண்டும் என உலக நாடுகளை வலியுறுத்துவோம்

- லாக் ஆஃப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

செவ்வாய் 16 மா 2021