மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

இதுதான் கடைசி.. : விலகிய ஆமீர்கான்

இதுதான் கடைசி.. : விலகிய ஆமீர்கான்

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமீர்கான். பாலிவுட்டைத் தாண்டி இந்தியா முழுவதும் ஆமீர்கானுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஏனெனில், கமர்ஷியல் படங்களுக்கு நடுவே, மக்களுக்கான சமூக அக்கறை கொண்ட பல சினிமாக்களைக் கொடுத்தவர் ஆமீர்கான். சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தங்கல், பிகே, 3 இடியட்ஸ், தாரே ஜமீன்பர், கஜினி என இவரின் பட தேர்வுகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

தற்பொழுது, கரீனா கபூருடன் ‘லால் சிங் சட்டா’ எனும் படத்தில் நடித்துவருகிறார் ஆமீர் கான். இந்தப் படத்தின் பணிகள் நடந்துவருகிறது. இந்தப் படத்தில் தான் விஜய்சேதுபதி நடிக்க வேண்டியது. சில காரணங்களால் நடக்க முடியாமல் போனது. ஹாலிவுட்டில் 1994ல் வெளியான ஃபாரஸ்ட் ஹம்ப் படத்தின் இந்தி ரீமேக்தான் இது. அமீர்கான் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உருவாகிவருகிறது.

அமீர்கானின் பிறந்த தினத்தில் ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துகளைத் தெரிவித்துவந்தனர். வாழ்த்துகளின் குவியலில் மிதந்த அமீர்கான், சோசியல் மீடியாவில் ஒரு போஸ்ட் ஒன்றைப் போட்டிருக்கிறார். அதில் ரசிகர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்ததோடு, சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுவே என்னுடைய இறுதி போஸ்ட் என அந்தப் பதிவை பதிவிட்டுவிட்டு, ட்விட்டரில் இருந்து விலகிவிட்டார். அதோடு, வேலையில் மட்டும் கவனம் செலுத்த அமீர்கான் முடிவெடுத்திருக்கிறாராம்.

சோசியல் மீடியா நேரத்தை விரையப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அதோடு, புதியசேனலைத் துவங்கியிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். எப்போதும்போல ரசிகர்களுடன் இணைந்தே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆமீர்கானின் சுய முடிவென்பதால் ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றம் என்றாலும், இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அமீர்கான் விலகியிருக்கும் ட்விட்டர் பக்கத்தில் 2கோடியே 67 லட்சம் பாலோயர்கள் இருந்தார்கள். அந்தக் கணக்கை அப்படியே டெலிட் செய்துவிட்டார். புதிதாக அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் ட்விட்டர் கணக்குத் துவங்கப்பட்டிருக்கிறது. இனி, அமீர்கான் படங்கள் குறித்த அப்டேட்டுகள்,தகவல்கள் இந்தப் பக்கத்தில் இடம்பெறும்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

செவ்வாய் 16 மா 2021