மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளரை மணந்த பும்ரா!

கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளரை மணந்த பும்ரா!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை நேற்று (மார்ச் 15) திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடந்துவரும் நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக்கொள்வதாக பிசிசியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் பிறகு, டி20 தொடரிலும் பும்ரா இடம்பெறாமல் போன நிலையில், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது. முதலில், மலையாள நடிகை அனுபமாவைத் திருமணம் செய்வதாக வதந்தி பரவிய நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மார்ச் 15ஆம் தேதியன்று, கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே, சஞ்சனா கணேசன் செய்திருந்த சில பழைய ட்வீட்களும் வைரலாகியிருந்தன. இந்த நிலையில், சஞ்சனா கணேசனை நேற்று (மார்ச் 15) பும்ரா திருமணம் செய்துள்ள திருமணப் புகைப்படங்கள் சிலவற்றை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய வீரர் பும்ராவுக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பும்ரா திருமணம் செய்ய இருப்பதாகச் சொல்லப்படும் 28 வயதான சஞ்சனா கணேசனின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர். ஆனால், தற்போது குடும்பத்துடன் வசிப்பது மகாராஷ்டிராவின் புனேவில். விளையாட்டுத் தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக சஞ்சனா மும்பையில் பணியாற்றி வருகிறார்.

-ராஜ்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 16 மா 2021