மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

சென்னையில் துவங்கும் ‘அண்ணாத்த’ : ரஜினியின் திட்டம்!

சென்னையில் துவங்கும் ‘அண்ணாத்த’ : ரஜினியின் திட்டம்!

ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது.

அஜித்துக்கு வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது அண்ணாத்த. கொரோனாவுக்கு முன்பே 60 % படப்பிடிப்பை முடித்திருந்தது படக்குழு. அதன்பிறகு, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் இறுதியில் துவங்கியது. ஆனால், படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா வந்துவிட்டதால், படப்பிடிப்பு ரத்தானது. அதோடு, ரஜினிக்கு உடல் நிலையில் சிக்கல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அடுத்து எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்பது உறுதி ஆகாமல் இருந்து வந்தது. படப்பிடிப்பில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்கள். என்னவென்றால், ஹைதராபாத்தில் நடந்து வந்தப் படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். அதன்படி, சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அடுத்த சில தினங்களில் படப்பிடிப்பு சூடுபிடிக்கும் என்கிறார்கள். அதன்பிறகு, படக்குழு கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளிலும் படமாக்க இருக்கிறார்களாம். அதோடு முழுமையாகப் படப்பிடிப்பு முடிகிறதாம்.

ஏற்கெனவே, நம்முடைய தளத்தில் ஒரு செய்தியைப் பதிவிட்டிருந்தோம். தேர்தல் பரபரப்பில் தமிழகம் இருக்கிறது. கட்சித் துவங்குவதாகக் கூறிய ரஜினியே, கட்சியைத் துவங்கவில்லை என்று கூறிவிட்டார். குறிப்பாக, இனி எப்போதும் இல்லை என்று கூறினார். அதனால், மற்ற கட்சிகள் ஆதரவு கேட்டு ரஜினியை அணுகும் சூழல் வந்துவிடக்கூடாது என்பதால் அடுத்த 15 நாட்கள் படப்பிடிப்பில் தன்னை பிஸியாக்கிக் கொள்ள இருக்கிறார் என்று கூறியிருந்தோம். அதன்படி, அண்ணாத்த ஷூட்டிங் அவசர அவசரமாகத் துவங்குகிறது. ஆக, யாரையும் படப்பிடிப்பின் காரணமாக ரஜினி சந்திக்க மாட்டார். இதனால், எதாவது அரசியல் கட்சியிலிருந்து அழைப்போ, சந்திப்புக்கோ வந்தால் ரஜினியை சந்திக்க வாய்ப்பு கிடைக்காது.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையில் படம் உருவாகிறது. ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா , சூரி உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி தின சிறப்பாக இப்படம் வெளியாக இருக்கிறது.

- ஆதினி

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

செவ்வாய் 16 மா 2021