மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

இன்றைய டி20: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

இன்றைய டி20: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இன்றைய (மார்ச் 16) போட்டி உட்பட மூன்று போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என குஜராத் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என அனைத்து விதமான தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் அபாரமாக தொடரைக் கைப்பற்றியது.

தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலை வகிக்கிறது. இந்த நிலையில், மீதமுள்ள மூன்று போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என குஜராத் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக குஜராத் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள மூன்று போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்தப் போட்டிகளைக் காண டிக்கெட் வாங்கியவர்களின் கட்டணம் திரும்ப அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

புனேயில் நடைபெற உள்ள மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

செவ்வாய் 16 மா 2021