மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

இரண்டாவது டி20: ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இரண்டாவது டி20: ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் மார்ச் 12ஆம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி அதே நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 14) இரவு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.

முதல் ஓவரிலேயே புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அவர் வீசிய மூன்றாவது பந்தில் பட்லரை டக் அவுட் முறையில் வீழ்த்தினார். பின்னர் டேவிட் மலான், ராய் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டேவிட் மலான் 23 பந்தில் 24 ரன்கள் எடுத்தபோது தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இந்த நிலையில் பவர்பிளேயில் எந்த விக்கெட்டும் எடுக்காத வாஷிங்டன் சுந்தர் 11ஆவது ஓவரில் ராய் விக்கெட்டையும் 13ஆவது ஓவரில் பேர்ஸ்டோ விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இடையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேத் ஓவரில் புவனேஸ்வர் குமாரும் ஷர்துல் தாக்கூரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ராகுல் விக்கெட் ஆன பிறகும் இந்திய அணி சிறப்பாக ஆடியது.

குறிப்பாக 20 ஓவர் போட்டியில் அறிமுக வீரரான இஷான் கிஷான் அறிமுகப் போட்டியிலேயே 56 ரன்கள் எடுத்து அசத்தி அவுட் ஆனார். அவர் ஐந்து பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்குச் சிறப்பான அடித்தளம் அமைத்தார். மறுமுனையில் இந்திய அணியின் கேப்டனும் அரை சதம் அடித்தார். அடுத்து ரிஷப் பண்ட் 26 ரன்களுடன் வெளியேறினாலும், விராட் கோலி 73 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் 17.5 ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. மூன்றாவது டி20 போட்டி இதே மைதானத்தில் நாளை (மார்ச் 16) நடைபெற உள்ளது.

-ராஜ்

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 15 மா 2021