மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

அப்டேட் தந்த சாமியே.. தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!

அப்டேட் தந்த சாமியே.. தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!

அஜித் ரசிகர்கள் `வலிமை’ படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று காத்திருக்கும் நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறார். ஒரு வழியாக வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வந்துவிட்டது.

அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ``வலிமை’’. போனி கபூர் தயாரிக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் இசையமைக்கிறார். ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, குர்பானி, புகழ், அச்யுத் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் படமாக்க பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இனி வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டுமே நிறைவடைய வேண்டும்.

இந்நிலையில், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அஜித் பிறந்த தினமான மே 1 ஆம் தேதி வெளியாக இருப்பதை போனி கபூர் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மே 1 ஆம் தேதி படத்தையே ரிலீஸ் செய்ய ஆசைப்பட்டார்கள் வலிமை டீம். இப்போது ஃபர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுக்கு முன்பே அனைத்து படப்பிடிப்பையும் முடித்துவிடவும் திட்டமாம். அஜித்தின் 50ஆவது பிறந்த தினமென்பதால் ரசிகர்களுக்குக் கூடுதல் சர்ப்ரைஸூம் தர இருக்கிறதாம் படக்குழு.

இனிமேல் படக்குழு அப்டேட்களை வரிசையாகத் தெறிக்கவிட உள்ளனராம். இதனை போனி கபூர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். அஜித் ரசிகர்களின் ரியாக்‌ஷன் பற்றிச் சொல்லவா வேண்டும். போனி கபூரை புகழ்ந்து கவிதைகளையும், போஸ்டர்களையும் சமூக வலைத்தளங்களில் அள்ளி வீசி வருகின்றனர்.

- ஆதினி

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 15 மா 2021