மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

விஷால் சிம்புவாகிவிட்டார்.. எனிமி ஷூட்டிங்கில் நடந்த கதை !

விஷால் சிம்புவாகிவிட்டார்.. எனிமி ஷூட்டிங்கில் நடந்த கதை !

விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படத்தின் புது போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் வெற்றிகரமாக 25வது நாள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 19ல் வெளியான படம் சக்ரா. பல்வேறு போராட்டங்களைத் தாண்டி ரிலீஸானது. இருப்பினும், மக்கள் மத்தியில் கவனம் பெறவில்லை என்பதே உண்மை.

சக்ரா படத்தை விஷாலே தயாரித்திருந்தார் என்பதால் படத்தின் மூலம் பெரியளவுக்கு லாபம் அவருக்கு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆர்யாவுடன் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி படத்தில் நடித்துவந்தார் விஷால்.

கடந்த வாரங்களில் ஒட்டுமொத்தப் படக்குழுவும் துபாய் படப்பிடிப்பிற்குச் சென்றது. சக்ரா படத்தின் வசூல் சறுக்கலினால் படப்பிடிப்புக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தார் விஷால். இவர் வரவேண்டிய நாட்களை விட தாமதமாகவே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். இதோடு, இந்த சிக்கல் தீரவில்லை.

படப்பிடிப்புக்குச் சென்று சில நாள் நன்றாக நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். தொலைப்பேசியில் அழைத்தாலும் எடுக்கவில்லையாம். ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஐதராபாத் ஷெட்யூலில் திடீரென சில நாட்கள் படப்பிடிப்பிலிருந்து காணாமல் போனார் என்பது நினைவிருக்கலாம். இந்த துபாய் ஷுட்டிங்கிலும் காணாமல் போய், மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் வந்து கலந்து கொண்டாராம்.

பொதுவாக வெளிநாடுகளில் படப்பிடிப்புக்குச் சென்றால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க வேண்டும். ஒரு சில நாட்கள் கூடுதலானால் கூட பெரியளவில் பண விரயமும், நேர இழப்பும் ஏற்படும். விஷாலின் இந்த செயல்பாட்டினால் திட்டமிட்டதை விட கூடுதலாக 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்காம். இதனால், பட்ஜெட்டும் எகிறிவிடும்.

எனிமி படத்தை வினோத் என்பவர் தயாரித்துவருகிறார். ஒரு தயாரிப்பாளராக இருந்துகொண்டு விஷாலே இப்படி செய்கிறாரே என மன வருத்தத்தில் இருக்கிறாராம். அதோடு, எப்போடா இந்தப் படம் முடியும் என நொந்துப் போய் புலம்பிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

பொதுவாக, படப்பிடிப்புக்கு வரவில்லை, வந்தாலும் திடீரென கெளம்பிவிடுவதெல்லாம் சிம்பு ஒரு காலத்தில் செய்துகொண்டிருந்தார். அவரால், படப்பிடிப்பில் பல நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, சிம்பு திருந்திவிட்டார். சிம்பு விட்டதை விஷால் செய்துகொண்டிருக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தினர் பேசிக் கொள்கிறார்கள்.

- தீரன்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 15 மா 2021