மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

திருப்பிக் கொடுக்கும் பழக்கம்:அப்டேட் குமாரு

திருப்பிக் கொடுக்கும் பழக்கம்:அப்டேட் குமாரு

கடன் வாங்கினா திருப்பிக் கொடுக்கலாம், ஏதாவது பொருளை இரவலா வாங்கினா திருப்பிக் கொடுக்கலாம். ஆனா நம்ம நாட்டாமை அதுக்கும் மேல...நம்மவர்கிட்டேர்ந்து வாங்கின மூணு தொகுதியை திருப்பிக் கொடுத்துட்டாருன்னா பாத்துக்கங்களேன்...தொகுதி பத்தலை பத்தலைனு போராட்டம் பண்ற கட்சிக்காரங்க எல்லாம் நாட்டாமைய பாத்து பாடம் கத்துக்கங்க. நாட்டாமை கஷ்டம் நாட்டாமைக்குதானே தெரியும்.

நீங்க அப்டேட் பாருங்க...

James Stanly

என்னங்க.. வேட்பாளர் பேரு இந்தியில இருக்கு..

வேட்பாளர் இந்திகாரன் இல்லயேன்னு சந்தோசப்படுயா..

நாகராஜ சோழன் MA.MLA

பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பது பெரும் தவறு:ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன் அண்ணன் வீட்டுக்கு ஒரு income டேக்ஸ் ரெய்டு பார்சல்...

பர்வீன் யூனுஸ்

கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், கல்யாணம் ஆகாத 90 கிட்ஸ்களுக்கு திருமணம் செய்து வைப்போம்னு மட்டும் தான் சொல்லலை.

மயக்குநன்

"நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி."- ரசிகருக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதில்!

மொதல்ல... வெற்றி பெறுகிற அளவுக்கு உங்களுக்கு 'வலிமை' இருக்கான்னு பாருங்க அக்கா..!

amudu

மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அதற்கு பாஜகதான் காரணம். -கடம்பூர் ராஜூ.

அப்போ அந்த வெற்றிநடை போடும் தமிழகமே சும்மாவா.!?

பர்வீன் யூனுஸ்

பம்பரமாய் சுழன்று கஸ்டமர்களுக்கு பரிமாறும் சாலையோர உணவுக்கடை ஊழியர்களை விட்டுட்டு , நம் பொறுமையை சோதித்து கடனுக்கு வேலை செய்யும் ரெஸ்டாரண்ட் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறோம்.

𝕳𝖆𝖗𝖎𝖙𝖍𝖗𝖆𝖓𝖆𝖉𝖍𝖎 𝖗𝖆𝖏𝖆

தேர்தலும் காதலும்..

தேர்தலில் ஒருவர் வெற்றி பெறணும்,

காதலில் இருவர் வெற்றி பெறணும்.

amudu

இலவசத் திட்டங்களுக்கு, கட்சிகளின் தேர்தல் அறிக்கை என்று பெயர்.

உதயா சக்கரவர்த்தி

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் ~ அதிமுக தேர்தல் அறிக்கை

"சோகம் என்னன்னா, வேலை கொடுக்க, அரசுகிட்ட எந்த நிறுவனமும் மிச்சமிருக்காது"

மயக்குநன்

மக்களுக்கு சேவை செய்வதே எனது ஒரே குறிக்கோள்!- ஓபிஎஸ்.

நீங்க 'தர்மயுத்தம்' செஞ்சப்பவே புரிஞ்சுக்கிட்டோம்..!

கோழியின் கிறுக்கல்!!

Bore அடிக்கும் போது பேசுபவரை விட,

Depressed ஆக இருக்கும் போது பேசுவதற்கான ஆட்களை சம்பாதித்து விட வேண்டும்!!

-லாக் ஆஃப்

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

திங்கள் 15 மா 2021