மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

டி20: 3,000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன்!

டி20: 3,000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன்!

டி20 போட்டியில் 3,000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், நேற்று (மார்ச் 14) நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் கோலி 3,000 ரன்களை எட்ட 72 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், முதல் டி20 போட்டியில் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறிய கோலி, இங்கிலாந்துக்கு எதிராக நேற்று (மார்ச் 14) நடந்த இரண்டாவது ஆட்டத்தில், 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3,000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மொத்தம் 87 டி20 போட்டிகளில் விளையாடி 3,001 ரன்களைக் கடந்து இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் மார்டின் குப்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 99 போட்டிகளில் கலந்து கொண்டு 2,839 ரன்களைச் சேர்த்துள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா உள்ளார். அவர், 108 போட்டிகளில் பங்கேற்று 2,773 ரன்களைக் குவித்துள்ளார்.

கோலியின் ஆட்டம் தவிர்த்து அறிமுகப் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் இஷான் கிஷான் 56 ரன்கள் அடித்து அறிமுக வீரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ரஹானே 61 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

திங்கள் 15 மா 2021