மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

ஹாலிவுட் படத்துக்காக நாடு நாடாகப் பறக்கும் தனுஷ்

ஹாலிவுட் படத்துக்காக நாடு நாடாகப் பறக்கும் தனுஷ்

கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் சென்றவர் ஹாலிவுட்டுக்கும் சென்றுவிட்டார் நடிகர் தனுஷ். தமிழில் ஜெகமே தந்திரம், கர்ணன் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. பாலிவுட்டில் அக்‌ஷய் குமாருடன் அட்ராங்கி ரே படமும் இந்த வருட ரிலீஸை எதிர்நோக்கியுள்ளது.

இந்த நிலையில், ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்க உருவாகிவரும் படம் ‘க்ரேமேன்’. அவெஞ்சர்ஸ் இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இணைந்து இயக்கிவருகிறார்கள். நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினலாக இது உருவாகிவருகிறது. ஹாலிவுட் கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துவருகிறார்கள்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாளவிகா மோகனுடன் தனுஷ் 43 படத்தில் நடித்துவந்தார் தனுஷ். முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்கா சென்றார் தனுஷ். முதல்கட்டப் படப்பிடிப்பு கலிஃபோர்னியாவில் தொடங்கியது. ஏப்ரலில் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறதாம் படக்குழு. அதன்பிறகு, அடுத்த ஷெட்யூலுக்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறதாம்.

குறிப்பாக, சீசெக் ரிபப்ளிக்கின் Prague எனும் நகரில்தான் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் சொல்கிறார்கள். படக்குழுவினர் அனைவரும் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. சிறப்பாக தனுஷுக்கானக் காட்சிகள் மட்டுமே படமாக்க இருக்கிறார்களாம். அதைமுடித்துவிட்டு, மீண்டும் இரண்டாம்கட்ட ஷெட்யூலுக்காக கார்த்திக் நரேன் படத்துக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படமும், ராம் குமார் இயக்கத்தில் நடிக்கும் படமும் அடுத்தடுத்து தனுஷுக்கு லைன் அப்பில் இருக்கிறது.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

ஞாயிறு 14 மா 2021