மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியில் புது ஷோ!

குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியில் புது ஷோ!

புதிதாக ஒரு நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகி பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டால், அதே மாதிரியான ஸ்டைலில் மற்ற தொலைக்காட்சியிலும் அந்த நிகழ்ச்சி பிரதி எடுக்கப்படும். இதுகாலம் காலமாக நடந்துவரும் விஷயம்.

விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர்’ என்றால் சன் டிவியில் ‘சன் சிங்கர்’ வரும். அந்தப் பக்கம் ‘அசத்தப் போவது யாரு’ என காமெடி செய்தால், இந்தப் பக்கம் ‘கலக்கப் போவது யாரு’ என்பார்கள். விஜய் டிவியில் ‘ஜோடி நம்பர் ஒன்’ ஹிட்டான நேரத்தில் கலைஞர் டிவியில் ‘மானாட மயிலாட’ பெரிய ஹிட்டானது. சன் டிவியில் ஹிட் ஷோவான ‘குட்டி சுட்டீஸ்’ நிகழ்ச்சியின் புது வெர்ஷனாக தற்பொழுது கலைஞரில் ‘அழகுக் குட்டிச் செல்லம்’ ஒளிபரப்பாகிறது.

அப்படி, விஜய் டிவியின் லேட்டஸ்ட் வைரல் நிகழ்ச்சியென்றால் அது ‘குக் வித் கோமாளி’ தான். சமையல் நிகழ்ச்சிக்குள் நடக்கும் அட்டகாச அதகளமே கான்செப்ட். டிவி பக்கமே திரும்பாத இளம் தலைமுறையையும் இழுத்துப் பிடித்து டிவிக்குள் கொண்டுவந்திருக்கிறது. முன்னரே சொன்ன மாதிரிதான், ஒரு நிகழ்ச்சி ஹிட்டானால் அதன் பிரதிபலிப்பு மற்ற டிவிகளிலும் இருக்கும். சன் டிவியும் புதிதாக ஒரு காமெடி சமையல் நிகழ்ச்சியை துவங்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு யார் தொகுப்பாளர் என்பதே ஹைலைட். விஜய் சேதுபதி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சன் டிவியில் ஏற்கெனவே நம்ம ஊரு ஹீரோ எனும் நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கியிருக்கிறார் விஜய்சேதுபதி. ஆனால், பெரியளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில், மீண்டும் விஜய்சேதுபதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது சன் டிவி. சனி, ஞாயிறுகளில் நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் திட்டமாம். அதற்காக பெரும் தொகையை சம்பளமாகப் பேசியிருப்பதாகவும் சொல்கிறார்கள். எந்த அளவுக்குப் பெரிய தொகையென்றால், தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு நிகழ்ச்சிக்கு அதிக சம்பளம் பெற்ற நடிகர் கமல்ஹாசன் மட்டும் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கோடிகளில் சம்பளம் வாங்கினார். அவரின் சம்பளத்துக்கு இணையான தொகையை விஜய்சேதுபதிக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

- தீரன்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

ஞாயிறு 14 மா 2021