மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

வலிமை வெளிநாடு ஷூட்டிங்... எங்கே, எத்தனை நாட்கள்?

வலிமை வெளிநாடு ஷூட்டிங்... எங்கே, எத்தனை நாட்கள்?

அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறிபிடித்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் இல்லையென்றாலும், அவ்வப்போது புதுப்புது தகவல்கள் கசிந்துக் கொண்டிருக்கின்றன.

இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக உருவாகிவரும் படம் ‘வலிமை’. யுவன்ஷங்கர் ராஜா இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். வலிமை படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, கன்னட நடிகர் கார்த்திகேயன் இருவரும் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். படக்குழுவானது படப்பிடிப்பின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்மரமாக இறங்கியிருக்கிறது.

ஸ்டைலிஷான போலீஸ் ஸ்டோரியாக உருவாகிவருகிறது. இந்தப் படத்தை தொடங்கும்போதே ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்களுக்கு வெளிநாட்டில் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஹெச்.வினோத். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்குள்ளேயே படப்பிடிப்பையும் முடிக்க நிர்பந்திக்கப்பட்டார். ஆனால், இந்தியாவில் எடுத்தக் காட்சிகள் பெரிதாக வினோத்துக்குத் திருப்தியைத் தரவில்லை. அதனால், வெளிநாட்டில் சில ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்தாக வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனால், வெளிநாடு ஷூட்டிங்குக்குச் செல்வது உறுதியானது.

இந்த நிலையில், வெளிநாட்டு ஷூட்டிங்குக்கு படக்குழு தயாராகி வந்தது. அதன்படி, ஏப்ரலில் அஜித் உட்பட படக்குழு வெளிநாடு பறக்க இருக்கிறார்கள். ஏப்ரலில் ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகத் தகவல். 10 நாட்கள் படப்பிடிப்பு முடித்துவிட்டு, உடனடியாக சென்னை திரும்பவும் திட்டம். அதோடு, படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து, வலிமை படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் அல்லது மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 14 மா 2021