மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

அரண்மனை 3 ரிலீஸ் தேதி இதுதான்!

அரண்மனை 3 ரிலீஸ் தேதி இதுதான்!

தமிழ் சினிமாவில் பேய் படங்களில் பிரபலமான இரண்டு சீரிஸ்கள் இருக்கிறது. ஒன்று, ராகவா லாரன்ஸின் பாசமிக்க காஞ்சனா பட வரிசைகள். இரண்டு, சுந்தர்.சி-யின் டெரர் காட்டும் பேய்களான ‘அரண்மனை’ பட சீரிஸ்கள். இதில், அரண்மனை படங்களின் மூன்றாவது பாகத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஆர்யா, சுந்தர்.சி, ஆண்ட்ரியா, ராஷிகண்ணா, விவேக், கோவை சரலா, சம்பத், நந்தினி, மனோபாலா, சாக்‌ஷி அகர்வால் மற்றும் யோகிபாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்க உருவாகிவரும் படம் ‘அரண்மனை 3’. சுந்தர்.சி இயக்கத்தில் இப்படம் உருவாகிவருகிறது. முந்தைய இரண்டு சீரிஸ்களிலும் த்ரிஷா மற்றும் ஹன்சிகா பேய்களாக டெரர் காட்டியிருந்தார்கள். காமெடியும் திகில் பேய்க் கதையுமாக ரசிகர்களின் ஃபேவரைட் படங்களானது.

இப்போது, மூன்றாவது பாகத்தில் பேயாக ஆர்யா நடித்திருக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் பணியாற்றிய சத்யா இசையமைத்திருக்கிறார். சுந்தர்.சி-யின் ஆஸ்தான செந்தில்குமார் ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷனும் முடிந்து படம் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது.

இந்தப் படத்தை மே மாதம் சம்மர் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுவருகிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுந்தர்.சி. அதோடு, எல்லாம் சரியாக வந்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடும் என்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்காம். விரைவிலேயே, அரண்மனை 3 படமானது சம்மர் ரிலீஸ் என அறிவிப்பு வரும்.

அரண்மனை முதல் பாகம் 2014ல் வெளியானது. அதில் வினய், ஆண்ட்ரியா, ஹன்சிகா, ராய்லட்சுமி, சந்தானம் நடித்திருந்தார்கள். அதுபோல, இரண்டாம் பாகமானது 2016ல் வெளியானது. சுந்தர்.சியுடன் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம்பாஜ்வா, சூரி நடித்திருந்தார்கள்.

- ஆதினி

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 13 மா 2021