மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

சமந்தாவின் மீது உரசலில் நயன்தாரா

சமந்தாவின் மீது உரசலில் நயன்தாரா

காதல் படங்களைக் கொடுப்பதில் டிகிரி எடுத்தவர் விக்னேஷ் சிவன். இவரின் போடா போடி, நானும் ரவுடிதான் படங்கள் கொஞ்சம் வெரைட்டியாகவே இருக்கும். இதில், விஜய்சேதுபதி, நயன்தாரா காம்போவில் நானும் ரவுடி தான் படம் பெரியளவில் ஹிட்டானது. மீண்டும் இந்தக் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்க இப்படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்துக்கானப் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடந்துவருகிறது. நானும் ரவுடிதான் ஸ்டைலில் இந்தப் படமும் இருக்கும் என்கிறார்கள். ஆனால், முக்கோணக் காதல் கதையாக இருக்கலாம் என்பதே பலரின் கருத்தும். இந்தப் படத்துக்கான அறிவிப்பு கடந்த 2020-ல் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

படம் அறிவித்ததோடு சரி, கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு துவங்கவே இல்லை. படப்பிடிப்பு துவங்கலாம் என நினைக்கும் போது, நாயகி சமந்தா படத்திலிருந்து விலகிவிட்டதாக ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதன்பிறகு, பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சமந்தா நடிக்க படமும் சமீபத்தில் துவங்கியது.

லேட்டஸ்ட்டாக நடந்த படப்பிடிப்பில் சமந்தாவுக்கான ஷூட்டிங் நடந்திருக்கிறது. அதில், சமந்தா நடித்து முடித்ததும் செட்டில் இருந்தவர்கள் கைதட்டியிருக்கிறார்கள். சமந்தாவின் நடிப்புக்கு பலரும் செட்டில் பாராட்டுகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நயன்தாரா கடுப்பாகிவிட்டாராம். ஒருமுறை செட்டில் சமந்தா நடித்துமுடித்ததும், தொழில் நுட்பக் கலைஞர்கள் கைதட்டவே டென்ஷனாகி இவரே அமைதியாக இருக்குமாறு சொல்லியதாகச் செட்டில் இருந்தவர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக, ஒரு நடிகர் நன்றாக நடிக்கும் போது, செட்டில் கைதட்டல்களும், வாழ்த்துக்களும் வருவது காலம் காலமாக இருக்கும் வழக்கம். அந்த கைதட்டல்களே நடிகர்களுக்கான முதல் பாராட்டு. ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கான சாம்பிளே அதுதான். ஆனால், சமந்தாவுக்கு நடந்தது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்பது போலவே பலரும் சொல்கிறார்கள்.

வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். விக்னேஷ் சிவன் தான் படத்தின் இயக்குநர். சமந்தாவின் மீது நயன்தாராவுக்கு ஏதும் மன உரசலா என்பது தெரியவில்லை. அப்படி இருக்கையில், சமந்தாவின் காட்சிகள் ஃபைனல் எடிட்டில் அதிகமாக இடம் பெறுமா? வெட்டி நீக்கப்படுமா என்பது கவனிக்க வேண்டிய விஷயம் என்கிறார்கள்.

- தீரன்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 13 மா 2021