மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

காடன் படத்துக்கு பெரும்விலை... சொல்லப்படும் காரணம் சரிதானா?

காடன் படத்துக்கு பெரும்விலை... சொல்லப்படும் காரணம் சரிதானா?

ராணா, விஷ்ணுவிஷால் மற்றும் பிரபுசாலமன் என ரசிகர்களின் விருப்பமானக் கலைஞர்கள் ஒன்றிணைந்த திரைப்படம் ‘காடன்’. இந்தப் படத்தின் திரையரங்க விற்பனைக் குறித்த தகவல் கசிந்துள்ளது.

பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தில் நடித்து, இந்தியளவில் பிரபலமானவர் ராணா. மைனா, கும்கி மாதிரியான ஹிட் படங்களைக் கொடுத்தவர் சாலமன். சமீபத்தில் கமர்ஷியலாக நல்லப் படங்களைக் கொடுத்துவருகிறார் விஷ்ணுவிஷால். இவர்கள் கூட்டணியில் உருவான படம் காடன். இயற்கை, பசுமை, அழகியல் என பிரபுசாலமனின் கைவந்தக் கலையான காடுகளிலும் மலைகளிலும் இந்தப் படமும் உருவாகியிருக்கிறது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிகளிலும் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், படமும் ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தின் விற்பனைப் பணிகளை தயாரிப்புத் தரப்பான ஈராஸ் நிறுவனம் துவங்கியிருக்கிறது.

காடன் படத்துக்கான திரையரங்க உரிமையை 27 கோடிக்கு விலை பேசிவருகிறதாம் தயாரிப்புத் தரப்பு. இந்த தொகையைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார்களாம் திரைத்துறையினர். இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன காரணம் என கேட்டால், பாகுபலி நாயகன் ராணா நடித்திருக்கிறார் என காரணம் சொல்கிறார்களாம். பெரிய விலை என்பதால், படத்தை வாங்க பலரும் தயக்கம் காட்டுவதாகத் தகவல்.

கடந்த வருடம் ஏப்ரல் 2020லேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, விலையைக் குறைக்க தயாரிப்புத் தரப்பு இறங்கி வரவில்லை என்றால், படம் ரிலீஸூக்கு நகர்வதில் சிரமம் என்பதே டிரேடிங் வட்டாரத்தினரின் கருத்தாக இருக்கிறது.

- ஆதினி

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சனி 13 மா 2021