மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

சியான் 60 கதைக்கும் பேட்ட படத்துக்கும் ஒரே ஒற்றுமை!

சியான் 60 கதைக்கும் பேட்ட படத்துக்கும் ஒரே ஒற்றுமை!

கெளதம் மேனனின் துருவநட்சத்திரத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜின் சியான் படத்திலும் விக்ரமுடன் நடிக்கிறார் சிம்ரன். துருவ், விக்ரம் நடிக்க ‘சியான் ’ படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது.

இந்தப் படத்தின் கதை குறித்த ஒரு தகவல் கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தைப் போலவே, இதுவும் ரிவெஞ்ச் ஸ்டோரி என்கிறார்கள். ரஜினி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார் நடிப்பில் வெளியான பேட்ட படத்திலும் எக்கச்சக்க மாஸ் காட்சிகள் இருக்கும். நிறைய சர்ப்ரைஸ் மொமண்டுகள் இருக்கும். ரஜினியின் ஆக்‌ஷன் பலிவாங்கல் கதையாக பேட்ட இருக்கும். அதுபோல, இதுவும் ஒரு ரிவெஞ்ச் கதை என்று சொல்லப்படுகிறது.

பேட்ட படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். அதுபோல, சியான் 60 படத்திலும் முதலில் இசையமைக்க அனிருத் தான் ஒப்பந்தமானார். ஆனால், அனிருத்துக்கு எக்கச்சக்க படங்கள் லைன் அப்பில் இருப்பதால், இந்தப் படத்திற்கும் சொன்ன நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்படுமென்பதால் விலகிவிட்டார். அனிருத்துக்குப் பதில், கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல்கட்டமாக படப்பிடிப்பை சென்னையில் துவங்கியிருக்கிறது படக்குழு. தொடர்ந்து, கோவா , டார்ஜிலிங் பகுதிகளில் படப்பிடிப்பை எடுக்க இருக்காம். விக்ரமுக்கு சிம்ரன் ஜோடி போல, துருவ் விக்ரமுக்கு வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார். மொத்தமாக, 70 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடவும் திட்டம்.

அஜய்ஞான முத்து இயக்கத்தில் கோப்ரா படத்தையும், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களும் விக்ரமுக்கு கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில்,கோப்ரா இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அதுபோல, சியான் 60 ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கார் விக்ரம்.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வெள்ளி 12 மா 2021