மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

சில்க், சாவித்திரி, ஜெயலலிதா வரிசையில்... பிரபல நடிகையின் பயோபிக்!

சில்க், சாவித்திரி, ஜெயலலிதா வரிசையில்... பிரபல நடிகையின் பயோபிக்!

சினிமாவின் நவீன மாற்றத்தில் பயோபிக் எடுக்கும் கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. சாதனைப் படைத்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குகிறார்கள் இன்றைய தலைமுறை இயக்குநர்கள்.

இயக்குநர் மிலன் லுத்ரியா இயக்கத்தில் நடிகை சில்க் ஸ்மிதா பயோபிக் 'டர்ட்டி பிக்சர்' எனும் பெயரில் பாலிவுட்டில் படமானது. அன்றைய காலக்கட்டத்திலேயே 200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த படம். அதைத்தொடர்ந்து, பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோபிக்காக ’நடிகையர் திலகம்’ படம் உருவானது. இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். மிகப் பெரியளவில் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் தேசியளவில் விருதுகளையும் பெற்றது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாக ‘தலைவி’ படம் தயாராகிவருகிறது. விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கனா நடிக்க படம் உருவாகி வருகிறது. படத்துக்கான டப்பிங் பணிகள் மும்மரமாக நடந்துவருகிறது. மே 13ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தொடர்ந்து, மறைந்த பழம்பெரும் நடிகை ஜமுனா பயோபிக் உருவாக இருக்கிறதாம். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என இந்திய மொழிகளில் 190க்கும் மேற்பட்ட படங்கள் நடித்தவர் ஜமுனா. கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். நடிகை சாவித்திரியின் நட்பினால் திரைத்துறைக்குள் வந்தவர் ஜமுனா.

நடிகையாக இருந்து இயக்குநராக மாறியவர். திரைத்துறையில் பிரபலமானதும் சமூக சேவைகளில் இறங்கியவர், அரசியலுக்கும் வந்தார். குறிப்பாக, தெலுங்கில் அதிகப் படங்களை நடித்திருக்கிறார். இவரின் பயோபிக் படத்தில் ஜமுனாவாக நடிக்க இருக்கிறாராம் தமன்னா. அதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ பெரியளவில் கைகொடுத்தது போல, ஜமுனாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாராம் தமன்னா... பார்க்கலாம்!

- ஆதினி

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

வெள்ளி 12 மா 2021