மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

அதர்வா படத்திற்கு இப்படியொரு பெயர் !

அதர்வா படத்திற்கு இப்படியொரு பெயர் !

தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை நடிகர்களில் ஒருவர் அதர்வா. வாரிசு நடிகராகத் திரையுலகத்திற்கு வந்திருந்தாலும், மிகப்பெரிய ஹிட்டுக்காக கடின உழைப்புடன் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் திரைக்கு வர தயாராகிவருகிறது. எட்டுத்தோட்டாக்கள் படத்தைக் கொடுத்த ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’, நானி நடித்த நின்னுக்கோரி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தள்ளிப் போகாதே’, ஒத்தைக்கு ஒத்த மற்றும் ருக்குமணி வண்டிவருது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்க ஸ்போர்ட்ஸ் டிராமாவாக படமொன்று உருவாக இருக்கிறது. ஏற்கெனவே இந்தக் கூட்டணியில் வெளியான சண்டிவீரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக இருக்கிறது. அதோடு, வித்தியாசமான பெயரொன்றையும் டைட்டிலாகத் தேர்ந்தெடுத்திருக்காம் படக்குழு. அதாவது, படத்துக்கு ‘பொத்தேரி’ என பெயரிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. அதோடு, ராஜ்கிரண் முக்கிய லீட் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக தனியாக கபடி விளையாட்டிற்கானப் பயிற்சியையும் மேற்கொண்டிருக்கிறார். இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், குருதிஆட்டம் படத்திலும் கபடி வீரராக அதர்வா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

வெள்ளி 12 மா 2021