மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

ஆறாவது முறையாக இணையும் கூட்டணி !

ஆறாவது முறையாக இணையும் கூட்டணி !

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பரபர ‘சியான் 60’ படம் தான். ஒவ்வொரு நாளும் புதுப் புது அப்டேட்டுகளை விட்டு விலாசிக் கொண்டிருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரமும், மகன் துருவ் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘சியான் 60’. விக்ரமின் 60வது படமென்பதால் தற்காலிகமாக இவ்வாறு பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்துவருகிறது.

அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருந்தார். அவருக்குப் பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரமுக்கு சிம்ரனும், துருவ்க்கு வானி போஜனும் ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல்.

புதிய அப்டேட் என்னவென்றால், படத்தில் முக்கிய ரோலில் நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தமாகியுள்ளார். தேசிய விருது நடிகரான பாபி சிம்ஹா ஆறாவது முறையாக கார்த்திக் சுப்பராஜூடன் கூட்டணி சேர்கிறார்.

கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலமாக தான் பாபிசிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துவருகிறார்.

பொதுவாக, ஒரு டீம் செட்டாகிவிட்டதென்றால் அதை உடைப்பதோ, மாற்றுவதோ கடினம். மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் போல தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத சில கூட்டணி இருக்கிறது. அந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜூம் பாபி சிம்ஹாவும் இணைந்துவிட்டார்கள்.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 12 மா 2021