மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

டி20 ஆரம்பம்: ‘நம்பர் ஒன்’ ஆகுமா இந்தியா?

டி20 ஆரம்பம்: ‘நம்பர் ஒன்’ ஆகுமா இந்தியா?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கான டி20 போட்டி இன்று (மார்ச் 12) அகமதாபாத்தில் தொடங்குகிறது. டி20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடிக்க இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த இடத்தைப் பிடிக்குமா என்ற ஆவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

டி20 போட்டி அணிக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று (மார்ச் 11) வெளியிட்டது. இதில் இங்கிலாந்து 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் பறிகொடுத்த ஆஸ்திரேலியா தரவரிசையில் ஓர் இடம் (267 புள்ளி) சரிந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா (268 புள்ளி) இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் 260 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூசிலாந்து 253 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரை இந்திய அணி 5-0 அல்லது 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேற முடியும். அதேநேரம் இங்கிலாந்து அணி முதலிடத்தை தக்கவைக்க குறைந்தது இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வசப்படுத்திய இந்திய அணி அதன் மூலம் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததுபோல் டி20 போட்டியிலும் முத்திரை பதிக்குமா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் டி20 தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டிக்காகக் காத்திருக்கிறார்கள்.

-ராஜ்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 12 மா 2021