மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கவலைக்கிடம்: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி!

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கவலைக்கிடம்: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி!

இயற்கை படத்தின் மூலம் 2003ஆம் ஆண்டில் தமிழ்த்திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். பதினெட்டு ஆண்டுகளில் இயற்கை, ஈ,பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய நான்கே படங்களை இயக்கியவர்.இப்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படத்தொகுப்புப் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். நேற்று (மார்ச் 11) மதியம் படத்தொகுப்புப் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் படத்தொகுப்புப் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது மூளை செயல் இழந்துள்ளதாக முதற்கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதித்து வருகிறார்கள். அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. பதினெட்டாண்டுகளில் நான்கு படங்களே இயக்கியிருந்தாலும் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநராக, இடதுசாரி சித்தாந்த வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். இவர் இயக்கிய படங்களில் எளிய மக்களுக்கும் புரியும்படி இடதுசாரி கருத்துகளைக் கூறியவர், இடதுசாரி சித்தாந்தத்தை சினிமா வியாபாரத்துக்கு வலதுசாரி இயக்குநர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் - கம்யூனிச கருத்துகளைப் பரப்புவதற்காகவே திரைப்படத் துறையில் இயக்குநரானேன் என்று பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்தவர் ஜனநாதன்

திரையுலகில் எல்லோருக்கும் பிடித்தவராக வலம் வந்த எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை மோசமடைந்தது அறிந்து ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 12 மா 2021