மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

பாடல் 3: திரெளபதையின் முத்தம் - தனுஷ் குரலில் கர்ணன் பட சிங்கிள்!

பாடல் 3: திரெளபதையின் முத்தம் - தனுஷ் குரலில் கர்ணன் பட சிங்கிள்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தில் இடம்பெறும் மூன்றாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் தனுஷுடன் லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 9ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.

கர்ணன் அழைப்பு

முதல் சிங்கிளான 'கர்ணன் அழைப்பு’ பாடலான கண்டா வரச்சொல்லுங்க பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணனுடன் நாட்டுப்புற பாடகி மாரியம்மாள் இணைந்துப் பாடியிருப்பார். இந்தப் பாடலை மாரி செல்வராஜ் எழுதியிருந்தார்.

பண்டாரத்தி புராணம்

இரண்டாவது சிங்கிள் 'பண்டாரத்தி புராணம்'. தேவா குரலில் யுகபாரதி எழுத்தில் கேட்பவர்களின் உள்ளுக்குள் புது அனுபவத்தை விதைத்திருக்கும். நாட்டுப்புறப் பாடலுக்கு தேவாவின் குரல் மிகச்சிறந்த தேர்வு எனப் பாராட்டையும் பெற்றது. டிரெண்டிங்கில் முதலிடத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திரெளபதையின் முத்தம்

வழக்கமான திரையிசைப் பாடல்களாக இல்லாமல், ஒவ்வொரு பாடல்களிலுமே புதுமையை புகுத்தி கவனம் ஈர்த்து வருகிறார் சந்தோஷ் நாராயணன். அப்படி, திரெளபதையின் முத்தம் எனும் தலைப்பில் ‘தட்டான் தட்டான்’ எனும் பாடல்தான் தற்போது வெளியாகியுள்ளது. தன்னுடைய படத்தில் ஒரு பாடலாவது பாடிவிடுவார் தனுஷ். அப்படி, கர்ணனில் தனுஷ் பாடியிருக்கும் ரொமாண்டிக் பாடல் இது. தனுஷுடன் மீனாட்சி இளையராஜா எனும் பாடகியும் இணைந்து பாடியிருக்கிறார். யுகபாரதியின் வரிகளில் பாடல் உருவாகியிருக்கிறது.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வெள்ளி 12 மா 2021