மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

ஏம்மா ரெண்டு தொகுதி எடுத்துட்டு வாயேன்: அப்டேட் குமாரு

ஏம்மா ரெண்டு தொகுதி எடுத்துட்டு வாயேன்:  அப்டேட் குமாரு

எப்பப் பாரு டிவியில இவருக்கு அத்தனை தொகுதி, அவருக்கு இத்தனை தொகுதி, அவங்களுக்கு தொகுதி கொடுத்ததால போராட்டம்னு நியூஸ் பாத்து பாத்து, பக்கத்து வீட்டு அங்கிள், அவங்க மனைவிகிட்ட, ‘ஏம்மா... ரெண்டு தொகுதி எடுத்துட்டு வாயேன்’னு சொல்லிட்டாரு. வடை கொடுத்துட்டு போயிருக்காங்க... இன்னும் ரெண்டு வடை எடுத்துட்டு வானு சொல்றதுக்கு பதிலா ரெண்டு தொகுதினு சொல்லிட்டாரு. அதுக்க அந்த அம்மா, ‘உங்களுக்கு இதுவே அதிகம்’னு சொல்லிட்டு போயிட்டாங்க.

நீங்க அப்டேட் பாருங்க

கோழியின் கிறுக்கல்!!

தர்பூசணி உண்ணும் பொழுது,

குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தான் என்ற பரிணாம வளர்ச்சியின் உண்மையை உணர முடிகிறது!!

தர்மஅடி தர்மலிங்கம்

விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்;- முதல்வர் பழனிசாமி!

அதுக்கு விரைவில் 'திமுக' தேர்தல் அறிக்கையை வெளியிடனுமே..

மயக்குநன்

நான் பிரச்சாரம் செய்து வரும் சேப்பாக்கம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாததில் வருத்தமோ, மகிழ்ச்சியோ இல்லை!- குஷ்பு.

அப்ப... ரெண்டுக்கும் 'மய்யமா' இருக்கீங்களா அக்கா..?!

ரமேஷ் ஏழுமலை

நடிகர் செந்தில் பாஜக-வில் இணைந்தார் # செய்தி.

மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அனைவரும் கவுண்டமணி ஆகினர்.

மயக்குநன்

பாஜகவில் இணைந்தார் நடிகர் செந்தில்!- செய்தி.

ரஜினிதான் கிடைக்கல... ரஜினியோட சட்டையைப் போட்ட செந்திலாவது கிடைச்சாரே..?!

balebalu

சிறிய கட்சிகள் நவ் :

எங்களால சிலிண்டர் லாம் தர முடியாது . டெலிவெரி டிப்ஸ் வேணா நாங்க கொடுக்குறோம் .

தர்மஅடி தர்மலிங்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களிடம் எதிர்ப்பு இல்லை - அண்ணாமலை

எதிர்ப்பு இருக்கா, இல்லையாங்கிறது தேர்தல் முடிஞ்சா தானா தெரியும்!

ℳsd↬இதயவன்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார் ~

அதான் உழைச்சி சாப்பிடுறவங்களுக்கு கொரோனா வராதே அப்புறம் ஏன் தடுப்பூசி?!

கோழியின் கிறுக்கல்!!

EMI என்பது பெரும்பாலானவருக்கு Equated Monthly "Insults" ஆக மாறி விடுகிறது!!

-லாக் ஆஃப்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வியாழன் 11 மா 2021