மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

மார்வெலின் ப்ளாக் விடோ ரிலீஸ் தேதி!

மார்வெலின் ப்ளாக் விடோ ரிலீஸ் தேதி!

சூப்பர் ஹீரோக்களை மையப்படுத்தி படங்கள் வந்தது போல, சூப்பர் ஹீரோயின்களை மையப்படுத்தியப் படங்களையும் தீவிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது மார்வெல் ஸ்டுடியோஸ். முழுக்க முழுக்க சூப்பர் ஹீரோயினை மையமாகக் கொண்டு, ‘கேப்டன் மார்வெல்’ படத்தைக் கொடுத்த மார்வெலின் அடுத்த ரிலீஸ் ‘ப்ளாக் விடோ’. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் ப்ளாக் விடோ கேரக்டரில் வரும் ஸ்கார்லெட் ஜாஹான்சன் தான் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார். கேட் ஷோர்ட் லேண்ட் இயக்கும் இந்தப் படம் இங்கிலீஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஆறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கான டிரெய்லர்கள் கூட வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

2020ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி வெளியாக இருந்தது. கொரோனாவினால் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப் போய் இந்த வருட மே மாதம் வெளியாக இருக்காம் . ஆக, ப்ளாக் விடோ திரைப்படம் வருகிற மே மாதம் 7ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதியாகியிருக்கிறது.

ப்ளாக் விடோவைத் தொடர்ந்து மார்வெலின் மற்ற படங்களும் தள்ளிப் போயிருக்கிறது. அதாவது பிப்ரவரி 12ல் வெளியாகியிருக்க வேண்டிய Eternals நவம்பர் 05ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து, 'Shang-Chi and the Legend of the Ten Rings' படமானது மே 7ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. அந்த தினத்தில் ப்ளாக் விடோ ரிலீஸாவதால் ஜூலை 9ஆம் தேதிக்கு தள்ளிப் போகிறது.

கடந்த 10 வருடங்களில் மார்வெலின் அவெஞ்சர்ஸ், அயர்ன்மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடாஷாவாக ‘ப்ளாக் விடோ’ கதாபாத்திரத்தின் சாகசங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு, இந்தமுறை சோலோவாக களமிறங்கி ஆக்‌ஷன் காட்டுகிறார். கெட் ரெடி ஃபோக்ஸ்!

- ஆதினி

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வியாழன் 11 மா 2021